சீனாவில் ரூ100 கோடி வசூல் சாதனை புரிந்த ஸ்ரீதேவி படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த வருடம் துபாயில் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார்.

AR Rahman and Sridevi's Mom collected 100 cr in China

இவரது மரணம் இந்திய  திரையுலகினரை மட்டுமல்லாமல் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவர் கடைசியாக நடித்திருந்த படம் 'மாம்'.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் நவாஸூதின் சித்திகி, அக்ஷய் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை ரவி உதயவார் இயக்கியிருந்தார்.

இந்த படம் இந்தியாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சீனாவில் கடந்த 10 ஆம் தேதி இந்த படம் வெளியானது. இந்த படம் அங்கு பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.

தற்போது வரை இந்த படம் அங்கு வெளியாகி ரூ.100 கோடி அளவுக்கு வசூல் சாதனை புரிந்துள்ளதாம்.