’அசுர இயக்குந’ருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் – பாலிவுட் இயக்குநர் பெருமிதம்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 23, 2019 10:58 AM
’கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘நோ ஸ்மோக்கிங்’, ’டேவ் டி’, ‘ப்ளாக் ஃப்ரைடே’ படங்கள் மூலம் இந்திய சினிமாவை உலக சினிமாவே திரும்பிப் பார்க்க வைத்தவர் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப். 2018ம் ஆண்டு தமிழில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார்.
தொடர்ந்து தேசிய அரசியல் பற்றி தனது கருத்துக்களை வெளிப்படையாக டிவிட்டரில் பதிவு செய்து வந்த அவர் மிரட்டல் காரணமாக சிறிது நாட்கள் டிவிட்டரை விட்டு விலகி இருந்தார். சமீபத்தில் மீண்டும் டிவிட்டிருக்கு வந்துள்ள அவர் தொடர்ந்து தன் அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் இட்ட பதிவில் அமெரிக்காவில் வெளியாகும் ’ஃபிலிம் கமெண்ட்’ பத்திரிக்கையின் கட்டுரை ஒன்றை குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்படங்கள் குறித்து அலசி இருக்கும் அந்த கட்டுரை வெற்றிமாறனுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் என்று அனுராக் குறிப்பிட்டுள்ளார்.
In film related news - @FilmComment published by Lincoln Centre has done a massive write up on @VetriMaaran and his cinema .. this is a massive recognition for the man who deserved it for long . pic.twitter.com/Qt97tTwiTa
— Anurag Kashyap (@anuragkashyap72) December 22, 2019