Charminar News Banner USA

முதன் முறையாக பிரபல ஹீரோவுடன் இணையும் வெற்றிமாறன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். 

Suriya to act in Director Vetrimaaran and Kalaippuli S Thanu's film

இந்த படத்தில் மஞ்சு வாரியர், டிஜே அருணாச்சலம், கென் கருணாஸ், பசுபதி, பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்திருந்தார். 

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தயாரிப்பாளர் எஸ்.தாணு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் #Suriya40 வி கிரியேஷன்ஸ் தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். 

Entertainment sub editor