“பெரு மகிழ்ச்சி அடைகிறோம்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அசுரன்’ திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

MK Stalin heaps praises on Vetrimaaran Dhanush's Asuran

'வட சென்னை' படத்துக்கு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'அசுரன்' திரைப்படம் கடந்த (அக்.4)ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகி வரவேற்பை பெற்று வருகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கென், டிஜே, அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய பாக்ஸ் ஆபீஸில் சுமார் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதையடுத்து, படக்குழுவினர் அசுரன் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலி தியேட்டரில் படம் பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,‘அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்..! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷ்க்கும் பாராட்டுகள்’ என குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர ‘அசுரன்’ பட இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமகா நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காலம் ஒதுக்கி அசுரனை பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் நன்றி ஐயா..!” என தெரிவித்துள்ளார்.