தனுஷ் - வெற்றிமாறனின் அசுரன் குறித்து பாலிவுட் இயக்குநர் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரித்து தனுஷ் நடித்து வெளியாகியிருக்கும் படம் அசுரன். வெற்றிமாறன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Karan Johar comments about Dhanush and Vetrimaaran's Asuran

இந்த படத்தில் மஞ்சு வாரியர், கென், டிஜே, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், பவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்று வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலக பிரபலங்கள், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். நேற்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கம் மூலம் நடிகர் தனுஷையும், இயக்குநர் வெற்றிமாறனையும்  வெகுவாக பாராட்டினார்.

இந்நிலையில் பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரன் ஜோகர் அசுரன் படம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''அசுரன் என்ன மாதிரியான படம். உங்களை வெகுவாக பாதிக்கும். வெற்றிமாறனின் கதை சொல்லலும், இயக்கமும் உங்கள் மனதை தாக்கக்கூடியது. மேலும் தனுஷின் நடிப்பு அபாரம். ஒரு பெரு வெடிப்பதற்கு முன்பு அவர் காட்டும் அமைதி, யாருடன் பொறுத்திப்பார்க்க முடியாதது. கண்டிப்பாக பாருங்கள். சினிமாவின் வெற்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.