"இந்த மாதிரி எப்போதாவது தான் ஒரு படம் வரும்...” வெற்றிமாறன் தான் தயாரிக்கும் படம் குறித்து
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 05, 2019 07:42 PM
பொல்லாதவன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்த வெற்றிமாறன், ஆடுகளம் திரைப்படத்துக்கு தேசிய விருது வென்று இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார்.

தனுஷோடு தொடர்ந்து இணைந்து பணியாற்றி வரும் அவர் எஸ். தாணுவின் தயாரிப்பில் பூமணியின் நாவலை தழுவி உருவாக்கிய அசுரன் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றுத் தந்தது.
இவரது அடுத்த படம் குறித்த தகவலை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் தயாரிக்கும் படம் பற்றின தகவலை வெற்றிமாறன் தற்போது வெளியிட்டுள்ளார்.
மும்பையச் சேர்ந்த பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கும் இந்த திரைப்படத்துக்கு ’பாரம்’ என பெயர் சூட்டியுள்ளனர்.
இது தமிழகத்தின் சில கிராமங்களில் கடைபிடிக்கப்படும் ’தலைக்கு ஊத்தல்’ எனும் வழக்கத்தை மையப்படுத்திய திரைப்படமாகும். இப்படத்தை ரெக்லெஸ் ரோசஸ் நிறுவனம் சார்பில் பிரியா கிருஷ்ணசுவாமியும், அர்த்ரா ஸ்வரூப்பும் இணைந்து தயாரித்திருந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறனும் தனது கிராஸ் ரூட் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் மூலம் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்டரை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வெற்றிமாறன் ’நம்மை சுற்றியுள்ள உலகின் மீது நாம் எத்தனை அக்கறை அற்றிருக்கிறோம் என்பதை இத்திரைப்படம் சுயப்பரிசோதனை செய்து கொள்ள வைக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.