விநியோகஸ்தர் சங்க தேர்தலில் டி.ஆர். அணி வெற்றி
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 22, 2019 11:08 PM
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கான விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் இன்று (22.12.2019) அண்ணா சாலையில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

தலைவர், துணைத்தலைவர், செயலாளர், கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான இந்த தேர்தலில் டி.ஆர். தலைமையிலான ஒரு அணியும், வினியோகஸ்தர் அருள்பதி தலைமையிலான மற்றொரு அணியும் மோதின.
காலை தொடங்கிய வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது முடிவுகள் வெளியாகி உள்ளது.
இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 235 வாக்குகள் பெற்று 12 வாக்குகள் வித்தயாசத்தில் வெற்றி பெற்றார்.
செயலாளர் பதவிக்கு T.மன்னன் (239 வாக்குகள்), பொருளாளர் பதவிக்கு பாபு ராவ் (258 வாக்குகள்), துணை தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு (232 வாக்குகள்)
துணை செயலாளர் பதவிக்கு K.காளையப்பன் (226 வாக்குகள்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.