''கவர்மென்ட் என்ன பிடிச்சுட்டு போய்டுவாங்க'' - அழும் சிறுவன் - பிரபல நடிகர் பகிர்ந்த வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாட்டு மக்களுடன் உரையாடிய மோடி ஊரடங்கை வருகிற மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். மேலும்  ஏப்ரல் 20 ஆம் தேதி வரை ஊரடங்கு மிகக் கடுமையாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Anupam Kher shares a viral video of a boy saying Modi Uncle | மோடி குறித்து சிறுவன் பேசிய கியூட் வீடியோவை பகிர்ந்த அனுபம் கேர்

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் திரையுலக பிரபலங்களும் அவ்வப்போது விழிப்பணர்வு ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகர் அனுபம் கேர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிறுவன் ஒருவனிடம் அவரது அம்மா, 'வெளியே போகலாம்' என்று அழைக்க, நான் வரமாட்டேன் என்கிறான். அவரது அம்மா ஏன் என்று கேட்க, 'வெளியே போனா கவர்மென்ட் என்ன பிடிச்சிட்டு போய்டுவாங்க, மோடி அங்கிள் வெளியே போகக்கூடாதுனு சொல்லிருக்காங்க' என்றார்.

''கவர்மென்ட் என்ன பிடிச்சுட்டு போய்டுவாங்க'' - அழும் சிறுவன் - பிரபல நடிகர் பகிர்ந்த வீடியோ வீடியோ

Entertainment sub editor