”பீஸ்ட் to விக்ரம்… எல்லாம் உங்களால்தான்… Miles to Go…” – அனிருத்தின் நெகிழ்ச்சிப் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.

Anirudh viral statement on beast Don Krk Vikram

Also Read | “சூர்யா Entry சூப்பர்…. Pure Fanboy சம்பவம்”… ‘விக்ரம்’ படம் எப்படி இருக்கு? FDFS பார்த்த Fans கருத்து

விக்ரம் ரிலீஸ்…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு  ‘விக்ரம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரிலீஸூக்கு முன்பே வைரல் ஹிட் ஆகின. அதுபோல மிரட்டலான தீம் இசையும் கவனம் பெற்றுள்ளது.

Anirudh viral statement on beast Don Krk Vikram

பீஸ்ட் to விக்ரம்…

இந்த ஆண்டில் இதுவரை அனிருத் இசையில் பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான் மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி ரசிகர்களை திரையரங்குக்கு இழுக்கும் காரணிகளாக அமைந்தன. குறிப்பாக பீஸ்ட் படத்தின் ‘அரபிக்குத்து’, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ‘டு டு டு’ பாட்டு, டான் படத்தில் ‘ஜலபுல ஜங்கு’ மற்றும் விக்ரம் படத்தின் ‘பத்தல பத்தல’ ஆகிய பாடல்கள் சமூவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் ரீல்ஸ் வெளியிட்டு கொண்டாடும் பாடல்களாக அமைந்தன.

Anirudh viral statement on beast Don Krk Vikram

அனிருத் நெகிழ்ச்சி…

இந்நிலையில் விக்ரம் படத்தின் ரிலீஸை ஒட்டி தற்போது அனிருத் நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “2022 ஆம் ஆண்டு பிறக்கும் போது, எப்படி இதைக் கடக்கப்போகிறோம் என நினைத்தேன். ஏப்ரல் 13 முதல் ஜூன் 3 வரை, எங்களிடம் நான்கு படங்களின் ரிலீஸ் கையில் இருந்தது. பீஸ்ட்டில் தொடங்கி, காத்து வாக்குல ரெண்டு காதல், டான் மற்றும் விக்ரம் வரை. இந்த படங்களின் இசை மீதான உங்கள் அன்பே, இதை சாத்தியமாக்கியது. எங்கள் இசைக்குழுவின் இசைக்கலைஞர்கள் இல்லாமல் இது சாத்தியமே இல்லை. விக்ரம் திரைப்படத்தை நாங்கள் ரசித்தது போலவே நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகிறோம். நான் எப்போதும் சொல்வது போல இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது” என்று கூறியுள்ளார்.

Anirudh viral statement on beast Don Krk Vikram

Also Read | 57 நாடுகளில் ‘கெத்து’ காட்டும் RRR… நெட்பிளிக்ஸ் வெளியிட்ட செம்ம மாஸ் Update

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh viral statement on beast Don Krk Vikram

People looking for online information on Anirudh, Anirudh Ravichander, Beast, Don Movie, KRK movie, Vikram Movie will find this news story useful.