"தோழியுடன் Dating".. நீச்சல் உடையில் நடிகை இலியானா வெளியிட்ட வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை இலியானா தனது தோழியுடன் இருக்கும் பிகினி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Actress Ileana D Cruz Date with French Women Friend

தமிழ் சினிமாவில் கேடி படத்தில் அறிமுகமான நடிகை இலியானா. பின் தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையானார். பின் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரீ- என்ட்ரி கொடுத்தார். இந்த நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

Actress Ileana D Cruz Date with French Women Friend

நடிகை இலியானா, தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தவர். இந்தியிலும் வருண் தவான், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர், சயிப் அலி கான் போன்ற ஹூரோக்களுடன் ஜோடி சேர்ந்தவர். இலியானா, கடைசியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தொடரான ​​தி பிக் புல்லில் அபிஷேக் பச்சன் மற்றும் நிகிதா தத்தாவுடன் நடித்தார்.

Actress Ileana D Cruz Date with French Women Friend

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இலியானா. அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், பிகினி உடை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஒருவரை 'ஒல்லியாக' மற்றும் 'அதிக நிறமாக' காட்டக்கூடிய அனைத்து புகைப்பட எடிட்டிங் ஆப் பயன்பாடுகளையும் நீக்கியதாக கூறி, தனது உடற்பருமனான போட்டோவையும் பகிர்ந்து இருந்தார், , நடிகை இலியானா டி'க்ரூஸ். இது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

Actress Ileana D Cruz Date with French Women Friend

இதற்கு முன்னதாக, இலியானா உடல் டிஸ்மார்ஃபிக் கோளாறுடன் போராடியதாகவும், அதனால் தற்கொலை எண்ணங்கள் கூட இருப்பதாகவும் கூறினார். 2017ல் நடந்த 21வது உலக மனநல காங்கிரஸில் அவர் இதைப் பற்றி பேசினார். இதுவும் அனைத்து தரப்பினராலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

Actress Ileana D Cruz Date with French Women Friend

இந்நிலையில் நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ப்ரான்ஸ் நாட்டு தோழியுடன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "என் ப்ரான்ஸ் நாட்டு ஸ்வீட் தோழியுடன் Date" என கூறியுள்ளார். இந்த பிகினி புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Actress Ileana D Cruz Date with French Women Friend

People looking for online information on Ileana, Ileana D Cruz will find this news story useful.