57 நாடுகளில் ‘கெத்து’ காட்டும் RRR… நெட்பிளிக்ஸ் வெளியிட்ட செம்ம மாஸ் Update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி அதிகளவு ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

RRR Netflix trending at No 1 in 57 countries worldwide

RRR

பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரிலீசாகியுள்ள படம் "RRR".  நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளராக கீரவாணி பணியாற்றினார்.

ரிலீஸூக்குப் பின்னர் RRR படம் உலகமெங்கும் திரையரங்குகள் மூலமாக பாக்ஸ் ஆபீஸீல் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட நிலையில் அது கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்திய அளவில் அதிக வசூல் செய்யப்பட்ட படங்களில் ஒன்றாக RRR இடம்பிடித்தது.

RRR Netflix trending at No 1 in 57 countries worldwide

ஓடிடி ரிலீஸ்…

RRR திரைப்படத்தின் திரையரங்க வெற்றியை அடுத்து  ஓடிடி வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். வெளியாகி 50 நாட்கள் கழித்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட வெர்ஷனின் ஓடிடி பிரிமீயர் வரும் மே 20 ஆம் தேதி முதல் ஜி 5 ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆனது. அதே நாளில் இந்தி வெர்ஷன் உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸில் வெளியானது.

RRR Netflix trending at No 1 in 57 countries worldwide

57 நாடுகளில் ட்ரண்ட்டிங்…

இந்நிலையில் ஓடிடியில் வெளியாகி 10 நாட்களுக்கும் மேல் கடந்துள்ள நிலையில் நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த திரைப்படம் உல்கம் முழுவது 57 நாடுகளில் ட்ரண்ட்டிங்லில் நம்பர் 1 இடத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள நாடுகள் அடங்கும் என அறிவித்துள்ளது. இது சம்மந்தமான போஸ்டரோடு ”இவர்களின் நட்பு உலகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. RRR தற்போது கர்ஜனையோடு 57 நாடுகளில் ட்ரண்ட்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது” என அறிவித்துள்ளது.

RRR Netflix trending at No 1 in 57 countries worldwide

தொடர்புடைய இணைப்புகள்

RRR Netflix trending at No 1 in 57 countries worldwide

People looking for online information on Junior NTR, Netflix, Rajamouli, Ramcharan will find this news story useful.