www.garudabazaar.com

LEO தீம் பாடலை பாடி அசத்திய சிறுவன்.. உடனே அனிருத் கொடுத்த சூப்பர் பரிசு! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது அமெரிக்காவில் தன்னுடைய ‘ஒன்ஸ் அப்பான் எ டைம்’ ( Once upon a time ) இசை நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணத்தில் இருக்கின்ற, தன்னுடைய திறமையான பங்களிப்பால் அனைவரையும் ஈர்த்த ராக் ஸ்டார் அனிருத், தானே ஒரு இனிமையான ரசிகனாகவும் மாறிய நிகழ்வும் நடந்துள்ளது. .

Anirudh sweet gesture to young fan who sang Leo Theme Song

வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியை தொடர்ந்து சனிக்கிழமை நியூஜெர்சியில் தங்களது அடுத்த நிகழ்ச்சியை ராக்ஸ்டார் குழுவினர் நடத்தி முடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போது ரசிகர்கள் பல பேருடன் கலந்துரையாடிய அனிருத் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்வின்போது ரசிகர் ஒருவர் லியோ படத்தின் தீம் பாடலை முழு உற்சாகத்துள்ளலுடன் பாடி அனைவைரையும் ஈர்த்ததும், கூடியிருந்தவர்கள் அதற்கு ஆர்ப்பரித்து வரவேற்பு அளித்ததுமான ஒரு நிகழ்ச்சியாக நியூஜெர்சியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி இடம் பிடித்தது.  அந்த ரசிகனின் பாடும் திறமையை கண்டு பிரமித்துப்போன அனிருத், தான் அணிந்திருந்த கூலிங்கிளாஸையே அவருக்கு பரிசாக அளித்து அந்த இளைஞனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

2023 ஏப்ரல் 15ஆம் தேதியில் இந்த இசை சுற்றுப்பயணத்தை முடிப்பதற்கு முன்பாக, வரும் நாட்களில் டல்லாஸ், அட்லாண்டா, சியாட்டில் மற்றும் ஆக்லாந்து ஆகிய இடங்களில் ராக்ஸ்டார் டீம் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். 

அனிருத்தின் இசையமைப்பில் தற்போது ஜெயிலர், லியோ, ஜவான், இந்தியன் 2, தலைவர் 170 மற்றும் என் டி ஆர் 30 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

Tags : Anirudh, Leo

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh sweet gesture to young fan who sang Leo Theme Song

People looking for online information on Anirudh, Leo will find this news story useful.