www.garudabazaar.com

சீனு ராமசாமி இயக்கத்தில் நெப்போலியன்.. புதிய படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீனு ராமசாமி இயக்கத்தில் 'மாமனிதன்' திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Napoleon Seenu Ramasamy New Movie Update

Images are subject to © copyright to their respective owners.

Also Read | மாவீரன் படத்தின் கதைக்களம் & ஷூட்டிங்.. முதல்முறையாக மனம் திறந்த சிவகார்த்திகேயன்!

இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, தென் மேற்குப் பருவக்காற்று திரைப்படத்துக்குப் பின் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் மாமனிதன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இதில் இடம்பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தர்ம துரை படத்துக்கு அடுத்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி மாமனிதன் படத்தில் இணைந்தனர்.

இந்த படம் வெளியானது முதல் விமர்சனங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Napoleon Seenu Ramasamy New Movie Update

Images are subject to © copyright to their respective owners.

யுவன் சங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான YSR பிலிம்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து இருந்தார். ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் இந்த படம் தமிழகம் மற்றும் கேரளாவில் வினியோகம் செய்யப்பட்டது. மாமனிதன் படத்துக்காக இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்தனர்.

உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் மாமனிதன் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி அடுத்ததாக அமெரிக்க இந்திய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்த புதிய படத்தில் நெப்போலியன், நந்திதா தாஸ், மற்றும் அமெரிக்க நடிகர்கள் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்காக படப்பிடிப்பு லொக்கேஷன்கள் பார்க்க இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் நடிகர் நெப்போலியன் இருவரும் இணைந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.‌

Also Read | ஆயுத பூஜைக்கு LEO படத்தோடு ரிலீஸாகும் புதிய மாஸ் ஹீரோ படம்.. வெளியான சூப்பர் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Napoleon Seenu Ramasamy New Movie Update

People looking for online information on Napoleon, Seenu ramasamy, Seenu Ramasamy New Movie Update will find this news story useful.