அவங்க பேசுற தமிழ் அழகு, அத விட அவங்க டான்ஸ் அழகு.. Behindwoods மேடையில் கீர்த்தி ஷெட்டியின் "Bullet Song"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals Award மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

Krithi Shetty dances for bullet song in bgm awards 2022

இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது மேடையில் கால் பதித்திருந்தனர். வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள், இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் விருதுகளையும் வென்று அசத்தி இருந்தனர். அந்த வகையில், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோர் விருது வென்றிருந்த வீடியோக்கள் ஏற்கனவே "Behindwoods TV" யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு, மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகி ட்ரெண்டிங்கிலும் இருந்தது.

விருது வென்ற கீர்த்தி ஷெட்டி

இதனையடுத்து, பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி விருது வென்றிருந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உப்பெனா, ஷ்யாம் சிங்க ராய், பங்கர்ராஜு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து, மக்கள் அதிகம் பிரபலமடைந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தினேனியுடன் இணைந்து கீர்த்தி நடித்துள்ள 'வாரியர்' படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

எவ்ளோ அழகா டான்ஸ் பண்றாங்க..

இதனைத் தொடர்ந்து, Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீர்த்தி ஷெட்டி, "Best Actor - Critics Choice" என்ற விருதை வென்றிருந்தார். இந்த விருதினை நடிகை சாய் பல்லவி, தினகரன் மற்றும் திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் வழங்கி இருந்தனர்.

தொடர்ந்து, விருது வாங்கிய பின் பேசிய கீர்த்தி ஷெட்டி, பார்வையாளர்களுக்கும், தொகுப்பாளர்களக்கும் தனது நன்றிகளை வெளிப்படுத்தி இருந்தார். அதே போல, உப்பெனா படத்தின் இயக்குனர், உடன் நடித்த விஜய் சேதுபதி குறித்தும், Behindwoods விருது மேடையில் பேசி இருந்தார் கீர்த்தி ஷெட்டி.

இதன் பின்னர், வாரியர் படத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில், சிம்பு பாடி இருந்த புல்லட் சாங்கிற்கும், தொகுப்பாளர்களான பிரியங்கா மற்றும் தீனாவுடன் இணைந்து மேடையில் நடனமாடி இருந்தார் கீர்த்தி ஷெட்டி. புல்லட் சாங் லிரிக் வீடியோவை விட, இதில் சிறப்பாக ஆடியதாக பலரும்  குறிப்பிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

அவங்க பேசுற தமிழ் அழகு, அத விட அவங்க டான்ஸ் அழகு.. BEHINDWOODS மேடையில் கீர்த்தி ஷெட்டியின் "BULLET SONG" வீடியோ

Krithi Shetty dances for bullet song in bgm awards 2022

People looking for online information on Behindwoods Gold Medals 2022, Behindwoods Gold Medals Awards 2022, BGM 8, Krithi Shetty, Uppena will find this news story useful.