ராங்கி பண்ணி மாட்டிக்கிட்ட த்ரிஷா.. - திமிரான ஃபர்ஸ்ட் லுக்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘ராங்கி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

South queen Trisha's Raangi film first look poster released

விஜய் சேதுபதியுடன் ‘96’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘பேட்ட’ ஆகிய சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்கி வரும் ‘ராங்கி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. தற்போது சிறிய இடைவெளிக்கு பின், ‘ராங்கி’ படத்தின் கிளைமேக்ஸ் ஷூட்டிங் உஸ்பெகிஸ்தான் நாட்டில் 20 நாட்கள் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் நடிகை த்ரிஷா ராங்கி செய்து போலீஸிடம் சிக்கிக் கொள்வது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திரையுலகில் 16 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ள த்ரிஷா, ‘சதுரங்க வேட்டை 2’, ‘பரமபத விளையாட்டு’, இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் படத்தில் சிம்ரனுடன் இணைந்து நடிக்கிறார்.