www.garudabazaar.com
iTechUS

BB -ல் விக்ரமன் கேட்டதை, இப்போ சர்ப்ரைஸா தந்து அசத்திட்டாங்களே.. கொடுத்தது யாரு பாருங்க?..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. இந்த சீசனில் களமிறங்கி இருந்த 21 போட்டியாளர்களும் வெற்றி பெறும் தகுதி உடையவர்களாக இருந்ததால் அனைத்து எபிசோடுகளும் விறுவிறுப்பாக அரங்கேறி இருந்தது.

Vikraman receive beef biriyani in exclusive show from ADK

அதே போல அடுத்தடுத்து எலிமினேஷன்கள், டாஸ்க்குகள், சண்டைகள், விவாதங்கள், கலகலப்பான சம்பவங்கள், எமோஷன்கள் என அனைத்தும் நிறைந்திருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் Finale -விற்கு அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய 3 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அசிம் வெற்றி பெற்றதாகவும் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். மேலும், விக்ரமன் இரண்டாவது இடமும் பிடித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனைவரும் வெளியேறி இருந்ததையடுத்து பிக் பாஸ் குறித்த பேச்சுகள் பரவலாக சமூக வலைத்தளங்களில் இருந்து வருகிறது. அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த விக்ரமனும், தனக்கு கிடைத்த மக்கள் ஆதரவால் மனம் நெகிழ்ந்து போனதாகவும் வீடியோக்களில் குறிப்பிட்டிருந்தார்.

Vikraman receive beef biriyani in exclusive show from ADK

இந்த நிலையில், தற்போது Behindwoods சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் விக்ரமன் கலந்து கொண்டிருந்தார். இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், பலரும் விக்ரமனை வாழ்த்தி வரவேற்றிருந்தனர். அது மட்டுமில்லாமல், மாலை போட்டு பொன்னாடையை தலையில் கட்டி திருஷ்டி சுற்றவும் செய்திருந்தனர்.

முன்னதாக, பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பின்னர், தனக்கு மக்கள் கொடுத்த வரவேற்பை அறிந்து தான் மனம் நெகிழ்ந்ததாக விக்ரமன் குறிப்பிட்டிருந்தார். அதனை நிஜமாக்கும் வகையில் இந்த தருணம் அமைந்திருந்தது. தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சில போட்டியாளர்கள் குறித்து நிறைய கருத்துக்களையும் விக்ரமன் பகிர்ந்து கொண்டார்.

அந்த சமயத்தில் நடுவே திடீரென ஒரு சிலர் மாஸ்க் அணிந்தபடி உள்ளே நுழைய பின்னர் அது ADK என்பதும் தெரிய வருகிறது. தொடர்ந்து, இருவரும் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், அங்கே உணவு பொருள் ஒன்று சர்ப்ரைஸாக விக்ரமனுக்கு கொடுக்கப்பட, அது என்ன என்பதும் யார் கொடுத்திருப்பார்கள் என்றும் Anchor ஷோபனா கேட்கிறார்.

தொடர்ந்து விக்ரமன் யோசித்து கொண்டே இருக்க, அது பீஃப் பிரியாணி என்றும் கணிக்கிறார். இதன் பின்னர், பீஃப் பிரியாணி என்பது உறுதியான நிலையில், அதனை எடுத்து உணவருந்தும் போது தான் கொண்டு வந்த பீஃப் பிரியாணி ADK கொண்டு வந்தது என்பதையும் அவர் தெரிவிக்கிறார். இருவரும் மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விடவும் செய்கின்றனர்.

Vikraman receive beef biriyani in exclusive show from ADK

முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, கடைசி வாரத்தில் தனக்கு பீஃப் பிரியாணி வேண்டுமென விக்ரமன் கேட்க, அதை பிக் பாஸ் அனுப்பி வைத்திருந்தார். மேலும் பிரியாணி சாப்பிட்டதால் மிகுந்த மகிழ்ச்சியில் விக்ரமன் இருந்ததாகவும் போட்டியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

BB -ல் விக்ரமன் கேட்டதை, இப்போ சர்ப்ரைஸா தந்து அசத்திட்டாங்களே.. கொடுத்தது யாரு பாருங்க?.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman receive beef biriyani in exclusive show from ADK

People looking for online information on ADK, Beef Biriyani, Bigg boss 6 tamil, Vikraman will find this news story useful.