www.garudabazaar.com
iTechUS

"அந்த மாதிரி பேசுறவங்க பாவம்.." விக்ரமன்கிட்ட போய் நின்ன கமல்.. அசிம் ரியாக்ஷன் இது தான்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது  சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் களமிறங்கி இருந்தனர்.

Azeem about bigg boss finale vikraman and kamalhaasan

                                       Image Credit : Vijay Television

Also Read | 14 வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா.. தளபதி 67 படக்குழு வெளியிட்ட தெறி வீடியோ!

ஆரம்பத்தில் இருந்தே அனைத்து எபிசோடுகளும் விறுவிறுப்பாக சென்றதால், பார்வையாளர்கள் அனைவரும் மிகவும் ரசித்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சியை கண்டுகளித்து வந்தனர்.

அதே போல, பல போட்டியாளர்களுக்கு ஏராளமான ரசிகர்களும் உருவாகி இருந்தனர். இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட Finale சுற்றுக்கு அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் முன்னேறி இருந்தனர். இந்த 3 பேருக்குமே நிறைய ரசிகர்கள் ஆதரவு இருந்ததால் கடைசி வரை யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து வந்தது.

Azeem about bigg boss finale vikraman and kamalhaasan

Image Credit : Vijay Television

இறுதியில், அசிம் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என அவரது கையை உயர்த்தி கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தை விக்ரமனும், 3 ஆவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து பல நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக் பாஸ் குறித்த கருத்துக்கள் பெரிய அளவில் பரவலாகவும் இருந்து வருகிறது.

அதே போல, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் தங்களின் அனுபவம் பற்றியும் பொது வெளியில் பேசி வருகின்றனர். இந்த நிலையில், அசிம் தன் மீதான விமர்சனம் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Azeem about bigg boss finale vikraman and kamalhaasan

Image Credit : Vijay Television

அசிம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது சமுதாயத்தில் சரி இல்லை என்பது போன்ற கருத்துக்கள் அதிகம் பரவி வந்தது. இதற்கு விளக்கமளித்த அசிம், "இப்படிப்பட்டவர் ஜெயிக்கக்கூடாதுன்னா, என்னங்க எனக்கு புரியல. அப்படி சொல்றவங்க ID எல்லாம் நீங்க போய் பாத்தீங்கன்னா, புதுசா Open ஆன ID தான். அப்படி ஏதாச்சும் சொல்லணும்ன்னு நெனைக்குறவங்க, அவங்க யாரு, விவரம் எல்லாம் வெச்சு பேசணும்" என தெரிவித்தார்.

ஆயிஷாவுடன் நடந்த சண்டை குறித்து பேசிய அசிம், "ராங்கிங் டாஸ்க்ல அந்த Heat of the Moment அப்படி சொன்னது. அதே ஆயிஷா வெளியே போயிட்டு உள்ள திரும்பி வரும் போது என்கிட்ட அன்பா பேசுனாங்கன்னு எல்லாருக்கும் தெரியும்" என்றார்.

Azeem about bigg boss finale vikraman and kamalhaasan

அதே போல, பிக் பாஸ் Finale வில் அசிம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் கோப்பையுடன் ஒரு பக்கம் நிற்க, கமல்ஹாசன் விக்ரமன் அருகே சென்று அவர் தோளில் கைபோட்டபடி நின்றிருந்தார். விக்ரமன் தான் கமல் மனசில் இருந்ததாக எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு பதிலளித்த அசிம், "நீங்க முந்துன சீசன் பார்க்கலன்னு அர்த்தம். ஆரி, ராஜுன்னு எந்த சீசன் ஆகட்டும். ஜெயிச்சவங்ககிட்ட கப் குடுத்துட்டு Runner Up கிட்ட போய் நிப்பாரு. அப்படி பேசுறவங்க பாவம், முந்தைய சீசன் பார்க்கலன்னு நெனைக்கிறேன். அதுனால அப்படி பேசுவாங்க" என தெரிவித்தார்.

Also Read | விக்ரமனுக்கு பறந்த மெசேஜ்.. அடுத்த கணமே செஞ்ச நெகிழ்ச்சி காரியம்..

"அந்த மாதிரி பேசுறவங்க பாவம்.." விக்ரமன்கிட்ட போய் நின்ன கமல்.. அசிம் ரியாக்ஷன் இது தான்!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Azeem about bigg boss finale vikraman and kamalhaasan

People looking for online information on Azeem, Azeem about bigg boss finale, Kamal Haasan, Vikraman will find this news story useful.