www.garudabazaar.com
iTechUS

"ஆமா PR டீம் வேலை செஞ்சாங்க.. ஆனா".. உண்மையை உடைத்து பேசிய அசீம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 6-ன் வெற்றியாளர் அசீம் தனது அனுபவம் குறித்து நமது சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

Azeem Exclusive about did he had PR Team for BB6

Also Read | "பெண்களை அப்படி பேசுனேனா?".. Live-ல தனலட்சுமிக்கு போன் செஞ்ச அசீம்..! 

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் இறுதி சுற்றுக்கு அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் எப்போதும் இறுதியில் இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே கிராண்ட் ஃபினாலே-விற்குள் நுழைவது வழக்கம். ஆனால் கடந்த சீசனில் முதன்முறையாக அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேரும் கிராண்ட் ஃபினாலே-விற்குள் நுழைந்தனர். இந்த மூவரில் வெற்றி பெறப் போவது யார் என ரசிகர்களிடையே சமூக வலைத் தளங்களில் பெரும் விவாதமே நடைபெற்று வந்தது. அப்போது பிக்பாஸ் சீஸனின் வெற்றியாளராக அசீமை அறிவித்தார் கமல்ஹாசன்.

Azeem Exclusive about did he had PR Team for BB6

இந்நிலையில் நமது சேனலுக்கு அசீம் சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். அப்போது தனது பிக் பாஸ் அனுபவங்கள் மற்றும் பிக் பாஸ் வீட்டில் உள்ளே நடந்த சம்பவங்கள் குறித்து பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது, உங்களுடைய வெற்றிக்கு பின்னால் PR டீம் இருந்ததாக சொல்கிறார்களே உண்மையா? என கேட்கப்பட்டது. அதற்கு அசீமும் பதில் அளித்து இருந்தார். அப்போது "ஆமாம் எனக்காக PR டீம் வேலை செஞ்சது. எனக்காக ஓட்டுப்போட்ட ஒவ்வொரு மக்களும் PR டீம் தான். பீச்-ல இன்டர்வியூ எடுக்கும்போது ஓர் அக்கா சொன்னாங்க எனக்கு அசீம் பிடிக்கும்னு அவங்க ஒரு PR. இப்படி எனக்காக ஓட்டுப்போட்ட ஒவ்வொரு மக்களும் எனக்கு PR தான். என்னோட நேர்மையை ரசிக்கிறவங்க ஒவ்வொரு நபரும் என் PR தான்" என உருக்கமாக தெரிவித்தார்.

Azeem Exclusive about did he had PR Team for BB6

தொடர்ந்து பேசிய அவர் தன்னை பொதுமக்கள் மட்டுமே வெற்றியடைய செய்ததாகவும் PR டீம் மூலமாக வெற்றியை அடைய முடியாது என்றே தான் கருதுவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர்,"PR மூலமாக ஒருத்தரை பத்தி நல்ல விஷயங்களை பரப்பலாம். அதேமாதிரி இன்னொருத்தர் பத்தி தப்பான விஷயங்களை பரப்பலாம். ஆனா, அதை மட்டும் வச்சுக்கிட்டு வெற்றபெற முடியாது. நான் வெற்றிபெற்றது மக்கள் போட்ட ஓட்டுகள் மூலமாக தான்" என்றார்.

Also Read | "விக்ரமனோட அந்த முகத்தை யாரும் பார்க்கல".. விக்ரமனின் சகோதரி சொன்ன விஷயம்.. EXCLUSIVE..!

தொடர்புடைய இணைப்புகள்

Azeem Exclusive about did he had PR Team for BB6

People looking for online information on Azeem, Azeem Exclusive, BB6 will find this news story useful.