www.garudabazaar.com
iTechUS

"மாஸ்க் -அ கழட்டுங்க அசிம்".. விக்ரமன் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஆள்!!.. பரபர நிமிடங்கள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் களமிறங்கியிருந்த நிலையில் இறுதி சுற்றுக்கு அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் முன்னேற்றம் கண்டிருந்தனர்.

Vikraman exclusive interview about bigg boss adk azeem

மூன்று பேருக்குமே அதிக மக்கள் ஆதரவு இருந்ததன் காரணத்தினால் யார் வெற்றி பெறுவார்கள் என்று பரபரப்பும், விறுவிறுப்பும் பார்வையாளர்கள் மத்தியில் உருவாகி இருந்தது. இறுதியில், அசிம் வெற்றி பெற்றதாக அவரது கையை உயர்த்தி கமல்ஹாசனும் அறிவித்திருந்தார். தொடர்ந்து இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சுகள் பரவலாக சமூக வலைத்தளங்களில் இருந்து வருகிறது. அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த விக்ரமனும், தனக்கு கிடைத்த மக்கள் ஆதரவால் மனம் நெகிழ்ந்து போனதாகவும் வீடியோக்களில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது Behindwoods சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் விக்ரமன் கலந்து கொண்டிருந்தார். இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், பலரும் விக்ரமனை வாழ்த்தி வரவேற்றிருந்தனர். அது மட்டுமில்லாமல், மாலை போட்டு பொன்னாடையை தலையில் கட்டி திருஷ்டி சுற்றவும் செய்திருந்தனர்.

Vikraman exclusive interview about bigg boss adk azeem

முன்னதாக, பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பின்னர், தனக்கு மக்கள் கொடுத்த வரவேற்பை அறிந்து தான் மனம் நெகிழ்ந்ததாக விக்ரமன் குறிப்பிட்டிருந்தார். அதனை நிஜமாக்கும் வகையில் இந்த தருணம் அமைந்திருந்தது. தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சில போட்டியாளர்கள் குறித்து நிறைய கருத்துக்களையும் விக்ரமன் பகிர்ந்து கொண்டார்.

அந்த சமயத்தில் நடுவே திடீரென ஒரு சிலர் மாஸ்க் அணிந்தபடி உள்ளே நுழைகின்றனர். அது யார் என விக்ரமன் குழப்பத்தில் இருக்க, நெறியாளரோ, "அசிம் அவர்களே, மாஸ்க்-க கழற்றுங்க" என கூறுகிறார். தொடர்ந்து அங்கே வந்த நபர் மாஸ்க்கை கழற்றிய பின்னர், அது ADK என்பது தெரிய வருகிறது.

Vikraman exclusive interview about bigg boss adk azeem

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் ADK மற்றும் விக்ரமன் ஆகியோரிடையே சில வாக்குவாதங்கள் நடந்திருந்தாலும், நிகழ்ச்சியின் இறுதியில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறி இருந்தனர். அப்படி இருக்கையில், தற்போது இந்த நிகழ்ச்சியிலும் ADK கலந்து கொண்டிருந்தார். தொடர்ந்து, இருவரும் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

"மாஸ்க் -அ கழட்டுங்க அசிம்".. விக்ரமன் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஆள்!!.. பரபர நிமிடங்கள்!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman exclusive interview about bigg boss adk azeem

People looking for online information on Azeem, Bigg boss, Vikraman will find this news story useful.