www.garudabazaar.com
iTechUS

"சினிமாவுக்கு வரணும்ன்னு அப்ப எண்ணமில்ல, இங்க எனக்கு போட்டின்னு".. ஆர்ஜே பாலாஜி Open டாக்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர் ஜே பாலாஜி நடிப்பில் அடுத்ததாக ரன் பேபி ரன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

RJ Balaji about cinema reviews and his experience

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அந்த மாதிரி பேசுறவங்க பாவம்.." விக்ரமன்கிட்ட போய் நின்ன கமல்.. அசிம் ரியாக்ஷன் இது தான்!!

பிப்ரவரி 3 ஆம் தேதியன்று இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

பொதுவாக, காமெடிக் கதைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்வு செய்து ஆர் ஜே பாலாஜி நடிப்பார். அவர் நடிப்பில் வெளியாகி இருந்த எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்கள் அந்த வகையில் தான் அமைந்திருந்தது. ஆனால், ரன் பேபி ரன் படத்தின் ட்ரைலரை வைத்து பார்க்கும் போது ஒரு சீரியஸான கதைக் களம் போல தெரிகிறது. எப்போதும் சிரித்துக் கொண்டும், கலாய் கொடுத்து கொண்டும் இருக்கும் ஆர் ஜே பாலாஜி, இதில் சற்று சீரியஸான ஒரு கதாபாத்திரத்திலும் வருகிறார்.

RJ Balaji about cinema reviews and his experience

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், ரன் பேபி ரன் திரைப்படம் குறித்து சில கருத்துக்களை ஆர்ஜே பாலாஜி பகிர்ந்து கொண்டுள்ளார். "வீட்ல விஷேசங்க படத்தில் நெருக்கமான காட்சி இருக்காது. அந்த காட்சியை திட்டமிடும் போதே நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் எடுத்தோம். ஆனால், 'ரன் பேபி ரன்' படத்தில் கண்ணியமான காதல் காட்சிகள் இருக்கும். செங்கல்பட்டு, செஞ்சி, மதுராந்தகம், வாலாஜா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடித்தினோம். ஒரே அறையில் நடக்கும் திரில்லராக இல்லாமல், பல இடங்களில் நடக்கும் விதமாக இருக்கும்.

பூவிழி வாசலிலே படத்தின் கதையை முன்பே எப்படி கூற முடியாதோ, அப்படித்தான் இந்த படத்தின் கதையையும் கூற முடியாது. ஆனால், கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு வரை யார் குற்றவாளி என்று யூகிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

நான் சினிமாவிற்கு வர வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. என்னுடைய ஆர்.ஜே. பணியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். சினிமாவிற்கு வந்தது ஆசீர்வாதத்தினால் தான். 10 ஆண்டுகளுக்கு முன்பு 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் தான் அறிமுகமானேன். அதற்கு பிறகு என்னுடைய இந்த வளர்ச்சியை ஆசீர்வாதமாக தான் கருதுகிறேன். ஆர்.ஜே.வாக இருக்கும் போது பலரையும் பேட்டி எடுத்திருக்கிறேன். ஆகையால், சினிமாவில் எனக்கு யாரும் போட்டி கிடையாது. மக்களாக கொடுக்காமல், எனக்கு நானே ஸ்டார் பட்டம் போட்டுக் கொள்வது பிடிக்காது.

RJ Balaji about cinema reviews and his experience

Images are subject to © copyright to their respective owners.

விமர்சனம் செய்வதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கிறது. அதை நாம் இப்படித்தான் விமர்சிக்க வேண்டும் என்று கூற முடியாது. இன்றைய காலத்தில் எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது. 1000 பேரில் 900 பேருக்கு முகநூல் பக்கம் இருக்கிறது. ஒருவருக்கு பிடித்தது இன்னொருவருக்கு பிடிக்காது. வீட்ல விஷேசங்க படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் பல வந்து கொண்டிருந்தாலும், பிடிக்கவில்லை என்ற விமர்சனங்களும் இருந்தது. அதை நம்மால் தடுக்க முடியாது" என கூறினார்.

Also Read | "Fans மீட் ஓகே, இது என்னண்ணே Haters மீட்டு?".. RJ பாலாஜி கலாய்.. ஒவ்வொரு காமெடியும் ஒவ்வொரு ரகம்!!

தொடர்புடைய இணைப்புகள்

RJ Balaji about cinema reviews and his experience

People looking for online information on RJ Balaji, RJ Balaji about cinema reviews will find this news story useful.