நீச்சல் உடையில் 'கேக்' கட்டிங்.. காதலருடன் 'Romance'.. AmirKhan மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் சிறந்த நடிகர்களில் ஒருவரான அமீர்கான் மகளின் பிறந்தநாள் புகைபடங்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Amir khan daughter ira khan birthday celebration gone viral

Also Read | BREAKING: கமல் தயாரிப்பில் சாய் பல்லவியுடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்!

அமீர்கானின் மகளான ஐரா கான், தன்னுடைய 25 ஆவது பிறந்தநாளை நேற்று (08.05.2022) கொண்டாடி இருந்தார்.

இதில், தனது குடும்பத்தினருடனும், தனது காதலருடனும், ஐரா கான் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள், அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

நீச்சல் உடையில் பிறந்தநாள் 'Celebration'

அமீர்கானின் முதல் மனைவியான ரீனா தத்தாவிற்கு பிறந்தவர் ஐரா கான். இவரது 25 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில், அமீர்கான், ரீனா தத்தா, அமீர்கான் மற்றும் இரண்டாவது மனைவி கிரண்ராவின் மகனான ஆசாத் ராவ் கான் ஆகியோருடன் கேக் வெட்டிக் கொண்டாடி இருந்தார்.

Amir khan daughter ira khan birthday celebration gone viral

காதலருடன் ஐரா கான்

குடும்பத்தினருடன் ஐரா கான் பிறந்த நாள் கொண்டாடியது போல, ஃபிட்னஸ் பயிற்சயாளரும், ஐராவின் காதலருமான நுபுர் சிகாரேவுடன் இணைந்தும் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இது தொடர்பான புகைப்படங்களை நுபுர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில், ஐரா கான் கேக் வெட்டும் புகைப்படமும், காதலருடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.

Amir khan daughter ira khan birthday celebration gone viral

வாழ்த்தும் ரசிகர்கள்

தன்னுடைய கேப்ஷனிலும் காதலிக்கு வாழ்த்தினை சொல்லி குறிப்பிட்டுள்ளார் நுபுர். இதனையடுத்து, நண்பர்களுடனும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஐரா கான் ஈடுபட்டிருந்தார். ரசிகர்கள் பலரும், ஐரா கானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Amir khan daughter ira khan birthday celebration gone viral

அமீர்கான் நடிப்பில் அடுத்ததாக, 'லால் சிங் சத்தா' திரைப்படம் ஆகஸ்ட் 11, 2022 அன்று வெளியாக உள்ளது. இதில், அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ள நிலையில், நாக சைதன்யாவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி, ஆஸ்கர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற 'பாரஸ்ட் கம்ப்' படத்தின் ரீமேக் தான், 'லால் சிங் சத்தா' என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

நீச்சல் உடையில் 'கேக்' கட்டிங்.. காதலருடன் 'ROMANCE'.. AMIRKHAN மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோ

Amir khan daughter ira khan birthday celebration gone viral

People looking for online information on Amir khan, Amir khan daughter, Amir khan daughter ira khan birthday celebration, அமீர்கான், ஐரா கான் will find this news story useful.