"இதுக்காகவே சில மாதம் வெயிட் பண்ணேன்.. கடைசில”… Birthday-வில் சாய் பல்லவி surprise!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சாய்பல்லவி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று அவரின் பிறந்தநாளில் வெளியாகியுள்ளது.

Sai pallavi new movie Gargi poster on birthday

Also Read | DON: டான் படத்தின் கதை இது தான்.. பிரிட்டிஷ் அரசின் சென்சார் போர்டு வெளியிட்ட மிரட்டல் தகவல்

பிரேமம் தந்த பிரபலம்…

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் சாய்பல்லவி. அதற்கு முன்பாக ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியிலும் மற்றும் தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார். ஆனால் பிரேமம் திரைப்படம் அவரை தென்னிந்திய மொழி ரசிகர்கள் மத்தியில் சாய்பல்லவியை பிரபலமாக்கியது.

Sai pallavi new movie Gargi poster on birthday

அதையடுத்து வரிசையாக முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். அவருடைய நடிப்பு, சிரிப்பு, ஹேர் ஸ்டைல், டான்ஸ் என பலவற்றுக்காகவும் அவரை பிடித்திருந்தாலும் சில குறிப்பிட்ட ரசிகர்களுக்கு சாய் பல்லவியின் கன்னத்தில் இருக்கும் முகப்பருக்கள் ஸ்பெஷலானவையாகவே குறிப்பிட்டு பிடிக்கும் என்று சொல்வதை கேட்டிருக்கிறோம்.

Sai pallavi new movie Gargi poster on birthday

கார்கி

சமீபத்தில் சாய்பல்லவி, நானியுடன் நடித்த ஷ்யாம் சிங்காராய் படமும், அதில் சாய் பல்லவியின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்றன. இந்நிலையில் இப்போது சாய்பல்லவி நடிப்பில் உருவாகும் ’கார்கி’ என்ற படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று சாய்பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். 96 மற்றும் ஜெய்பீம் படப்புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Sai pallavi new movie Gargi poster on birthday

படம் பற்றி…

இந்த படம் சாய்பல்லவி பற்றிய தன்னுடைய பதிவில் “ நான் சில மாதங்களாக இந்த படத்தைப் பற்றி பேசவேண்டும் என காத்திருந்தேன். கடைசியில் என் பிறந்தநாளில், எங்களின் படக்குழு படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். உங்களிடம் ‘கார்கி’ யை அறிவிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

"இதுக்காகவே சில மாதம் வெயிட் பண்ணேன்.. கடைசில”… BIRTHDAY-வில் சாய் பல்லவி SURPRISE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sai pallavi new movie Gargi poster on birthday

People looking for online information on Gargi Movie, Gargi Movie Poster, Sai Pallavi, Sai pallavi new movie will find this news story useful.