பெரும் பரபரப்பு! ஷாக் ஆன திரையுலகம்! விவாகரத்தை அறிவித்த அமீர்கான் - கிரன் ராவ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான். லகான், தங்கல், பிகே என அமீர்கான் நடிப்பிலான படங்களுக்கு இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ரசிகர்களும் வரவேற்பும் ஏராளம்.

Aamir Khan, Kiran Rao announce divorce 15 yrs of marriage

நடிகர் அமீர்கான் முதலில் ரீனா தத்தை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐரா கான், ஜூனைத் என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இருவரும் 2002-ல் விவாகரத்து செய்தனர். அதன் பின்னர் 2005-ஆம் ஆண்டு கிரன் ராவை, அமீர் கான் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் தான், தற்போது அமீர் கான் - கிரண் ராவ் தம்பதியர் கூட்டாக விவாகரத்தினை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “15 ஆண்டுகள் நாங்கள் மகிழ்ச்சியான தம்பதியாக வாழ்ந்தோம்.

Aamir Khan, Kiran Rao announce divorce 15 yrs of marriage

இருவருமே தனித்தனியாக புதிய வாழ்க்கைக்குள் நுழைவதை காண்பீர்கள். நாங்கள் இனி கணவன் மனைவி அல்ல. மகன் ஆசாத்துக்கு நல்ல பெற்றோராக இருப்போம். சில காலத்துக்கு முன்பே இந்த முடிவை எடுத்துவிட்டோம். என்றாலும் சில நடைமுறைகளால், இதனை அறிவிக்க தாமதம் ஆகிவிட்டது.

நாங்கள் மண வாழ்க்கையில் இருந்து பிரிந்தாலும் திரைத்துறையிலும், பானி அறக்கட்டளை உள்ளிட்ட சமூகசேவையிலும், குழந்தையை வளர்ப்பதிலும் தொடர்ந்து இணைந்தே செயல்படுவோம். விவாகரத்து என்பது முடிவு கிடையாது. இது இன்னொரு புதிய வாழ்க்கையின் ஆரம்பம். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Aamir Khan, Kiran Rao announce divorce 15 yrs of marriage

அமீர் கான் - கிரண் தம்பதிக்கு திருமணமாகி, 15 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இவர்களின் விவாகரத்து பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

ALSO READ: "சூர்யா பர்த்டேவில் fans-க்கு இப்படி ஒரு ட்ரீட்டா?!".. அது மட்டும் நடந்தா... பரபரப்பு தகவல்கள்!

Aamir Khan, Kiran Rao announce divorce 15 yrs of marriage

People looking for online information on Aamir Khan, Kiran Rao will find this news story useful.