விஜய் தேவரகொண்டா பிறந்தநாள் பார்ட்டியில் சமந்தா.. VJD-க்கு கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆந்திராவைச் சார்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டா தனது 33 வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.

Samantha attend Party and wishes Vijay Devarakonda Birthday

Also Read | துல்கர் - ராஷ்மிகா - மிருணாள் நடிக்கும் புதிய படம்.. ராஜா & SPB நாஸ்டால்ஜியாவில் செம மெலடி

சமந்தா, அனன்யா பாண்டே, லைகர் இயக்குனர் பூரி ஜெகநாத் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தற்போது காஷ்மீரில் சிவ நிர்வாணாவின் இயக்கத்தில் VD11 படப்பிடிப்பில் இருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கு இப்படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ள சமந்தா, அவருக்கு வாழ்த்து தெரிவித்தபடி, படப்பிடிப்பு செட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Samantha attend Party and wishes Vijay Devarakonda Birthday

அதில், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் #LIGER விஜய் தேவரகொண்டா. இந்த ஆண்டு உங்கள் வழியில் வரவிருக்கும் அனைத்து அன்புக்கும் பாராட்டுகளுக்கும் நீங்கள் தகுதியானவர். நீங்கள் வேலை செய்யும் விதம் & நீங்கள் செயல்படுவதைப் பார்ப்பது நம்பமுடியாத அளவிற்கு ஊக்கமளிக்கிறது. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று சமந்தா வாழ்த்தியுள்ளார்.

Samantha attend Party and wishes Vijay Devarakonda Birthday

தனது சமூக ஊடக பக்கத்தில், சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் தோளில் கைவைத்தபடி ஒன்றாக போஸ் கொடுத்த படத்தைப் பகிர்ந்துள்ளார். பிறந்தநாள் வாழ்த்து பேனர் மற்றும் பலூன்கள் பின்னணியில் காணப்படுகின்றன.  பிறந்தநாள் கொண்டாட்டங்களின் கூடுதல் புகைப்படங்களை VD11 படக்குழு சமூக ஊடக கணக்கில் பகிர்ந்து கொண்டது.

Samantha attend Party and wishes Vijay Devarakonda Birthday

புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குடும்ப பொழுது போக்கு படமாக இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தை ஷிவ நிர்வானா இயக்க, முரளி ஒளிப்பதிவு செய்கிறார். இவர் காலா, கபாலி, மெட்ராஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார். ஹேஷம் அப்துல் வாஹப் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

VD11 படத்தின் முதல் லுக் போஸ்டர் மே 16 அன்று வெளியாக உள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

விஜய் தேவரகொண்டா பிறந்தநாள் பார்ட்டியில் சமந்தா.. VJD-க்கு கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Samantha attend Party and wishes Vijay Devarakonda Birthday

People looking for online information on Samantha, Vijay Devarakonda, Vijay Devarakonda Birthday will find this news story useful.