Reliable Software
www.garudabazaar.com

ட்விட்டரில் இணைந்த இயக்குநர் பாலா .. முதல்வரை வாழ்த்தி 'தெறிக்கவிடும்' முதல் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பாலாவின் படங்களுக்கு தீவிர ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

Bala joined in twitter viral wishes to MKStalin Trending

இன்றைக்கு இருக்கும் முன்னணி நடிகர்கள் விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, நடிகை ஜோதிகா, இளம் நடிகர்கள் அதர்வா, ஜி.வி.பிரகாஷ் என பலரையும் வைத்து வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் பாலா.

இந்நிலையில் இயக்குநர் பாலா இன்றைய சமூகத்தின் சாளரங்களுள் ஒன்றான ட்விட்டரில் இணைந்துள்ளார். ட்விட்டரில் இணைந்த கையோடு, தற்போது முதல்வராகியிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறார்.

இதுபற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு. தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதை தவிருங்கள் என்று கேட்டுக்கொண்டீர்கள். ஆனாலும் இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம். நன்றிகள்” என்று குறிப்பிடதுடன், “வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி” குறளையும் பாலா இணைத்துள்ளார்.

ALSO READ: "மனசு சரியில்ல.. பயமா இருக்கு".. நடிகை கஸ்தூரி ரசிகர்களுக்கு பகிர்ந்த மெசேஜ்..

Tags : Bala, DMK, MKStalin

தொடர்புடைய இணைப்புகள்

Bala joined in twitter viral wishes to MKStalin Trending

People looking for online information on Bala, DMK, MKStalin will find this news story useful.