www.garudabazaar.com

"சினிமாவின் எவெரெஸ்ட்".. உலகநாயகனை சந்தித்த 'பிரேமம்' இயக்குனர் .. நெகிழ்ச்சி பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசனை சந்தித்திருக்கிறார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இது குறித்து அவர் எழுதியுள்ள நெகிழ்ச்சி பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Alponse Puthren emotional post about Meeting with Kamal haasan

Also Read | 'துணிவு'-ல அஜித் குமார் கேரக்டர் பெயர் இதுதானாம்.. வெளியான மாஸ் தகவல்..!

தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் கமல் ஹாசன். நடிகர், இயக்குனர், நடன இயக்குனர், பாடகர் என பல்துறை வித்தகராக திகழும் கமல்ஹாசனுக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தனது ரசிகர்களால் உலக நாயகன் என்று கொண்டாடப்படும் கமல் ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாகவே அமைந்து இருந்தது.

இதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் மணிரத்னத்துடன் இணைய இருப்பதை சமீபத்தில் உறுதிப்படுத்தியிருந்தார் கமல் ஹாசன். KH234 என்று அழைக்கப்படும் இந்த படத்தை மணிரத்னம் இயக்க மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கிறது.

மலையாளத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் பிரேமம். நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் வெளியான கோல்ட் படத்தை இயக்கி இருந்தார். பிரித்விராஜ், நயன்தாரா உள்ளிட்ட பல திரை பட்டாளம் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனை சந்தித்திருக்கிறார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில்,"சினிமாவின் எவரெஸ்ட் சிகரமான உலகநாயகன் கமல்ஹாசனை என் வாழ்க்கையில் முதல்முறையாக சந்தித்தேன். அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றேன். கிட்டத்தட்ட 5 முதல் 6 சிறிய சினிமாக் காட்சிகளை அவர் சொல்லி கேட்டேன்...எனது எழுதும் புத்தகத்தில் 10 நிமிட இடைவெளியில் சிறு குறிப்புகளை எடுத்துக்கொண்டேன்.

ஒரு மாஸ்டராக அவரைப் பொறுத்தவரையில் அவர் பகிர்ந்துகொண்டவை சிறிய அனுபவங்கள் தான்... ஆனால் ஒரு மாணவனாக அவர் சொன்ன உள்ளடக்கத்தை நான் தவறவிட்டுவிடுவேனோ என்று பயந்தேன். இதற்கு யுனிவர்ஸுக்கு நன்றி. இந்த நம்பமுடியாத & சர்ரியல் மற்றும் அழகான அனுபவத்திற்காக RKFI இன் திரு.மகேந்திரன் & திரு. டிஸ்னிக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கமல்ஹாசனுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அல்போன்ஸ் புத்திரன் அதனுடன் பகிர்ந்திருக்கிறார். இந்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.

Also Read | வாரிசு இசை வெளியீட்டு விழா.. விஜய் பேசியதை ஆர்வமுடன் பார்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி..

தொடர்புடைய இணைப்புகள்

Alponse Puthren emotional post about Meeting with Kamal haasan

People looking for online information on Alphonse Putharen, Alphonse Putharen meets Kamal Haasan, Kamal Haasan will find this news story useful.