www.garudabazaar.com

'துணிவு'-ல அஜித் குமார் கேரக்டர் பெயர் இதுதானாம்.. வெளியான மாஸ் தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் நாளை உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Actor Ajith Kumar Character name in Thunivu Movie Revealed

Also Read | ஷாருக் கான் நடிக்கும் 'பதான்'.. டிரெய்லரை வெளியிட்ட 'வாரிசு' விஜய்..!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரித்திருக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடித்திருப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்துள்ளார்.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்திருக்கிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணியாற்றி உள்ளார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

நாளை துணிவு படம் உலகமெங்கிலும் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. படத்தில் அஜித்தின் பெயர் AK என்றும், அதுவும் கடைசியில் தெரியவரும்படி அமைக்கப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

துணிவு படத்தின் கேரக்டர் அறிமுக போஸ்டர்களிலும் அஜித்தின் கேரக்டர் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், அஜித் கேரக்டர் பெயர் AK என தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | விக்ரமன் பற்றிய மீம்.. பார்த்ததும் விழுந்து சிரிச்சிட்டாரு.. இன்றைய பிக்பாசில்..!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajith Kumar Character name in Thunivu Movie Revealed

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Character name in Thunivu Movie, Thunivu will find this news story useful.