www.garudabazaar.com

“விஜய் கிட்ட ஒரு ஆரா இருக்கும்.. Set-ல அதை உணர முடியும்!”.. ‘வாரிசு’ அம்மா ஜெயசுதா Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக 'வாரிசு' திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2023 அன்று திரை அரங்குகளில் வெளியாக உள்ளது.

varisu vijay mother character jayasudha exclusive

Also Read | Alya Manasa : விபத்தில் சிக்கி எலும்பு முறிவு.. “சஞ்சீவ் கதறி அழுறார்..”.. நடிகை ஆல்யா மானசா உருக்கம் ..

வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

varisu vijay mother character jayasudha exclusive

சமீபத்தில்  வெளியான வாரிசு பட டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளதால், ரசிகர்களும் இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிகை ஜெயசுதா, பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்திருக்கிறார். இந்த பேட்டியில் நிறையவே சுவாரசிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

varisu vijay mother character jayasudha exclusive

அதில் பேசியவர், “என்னுடைய திரைத்துறை வாழ்க்கை கிட்டத்தட்ட 50 வருடங்களை கடந்து இருக்கிறது. ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் தமிழிலும் தெலுங்கிலும் நடித்து விட்டேன். சென்னையில் பிறந்து வளர்ந்த நான், 42 வயது வரை, சென்னையில் தான் இருந்தேன். அதன் பிறகு ஹைதராபாத்திற்கு வந்தேன். பெரும்பாலும் நடித்த திரைப்படங்கள் தெலுங்கு படங்கள் என்பதால், இங்கு வந்தேன்.

varisu vijay mother character jayasudha exclusive

இயக்குநர் வம்சிக்கு அவ்வப்போது போன் செய்வேன். மெசேஜ் பண்ணுவேன். எனக்காக மிக அழகான ஒரு கேரக்டரை எழுதி வருவதாக கூறினார். அது தமிழா தெலுங்காஎன்று தெரியாது. திடீரென அது தமிழ் என்றதும் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

varisu vijay mother character jayasudha exclusive

அதுவும் விஜய்க்கு அம்மாவாக நடிக்கணும் என்று கூறியதும் சந்தோஷப்பட்டேன். அவர் நடிகர் விஜய் என்பது போல தெரிய மாட்டார். ஜோசப் விஜய் தான். எனது மகன் மாதிரி தான் தெரிவார். மிகவும் பணிவானவர், எளிமையானவர். அவரிடம் ஒரு ஆரா இருக்கும். அவரிடம் அதை உணர முடியும். அவர் செட்டுக்கு வந்தாலே அதை நாம் பெற முடியும். வாரிசு திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.

varisu vijay mother character jayasudha exclusive

வாரிசு திரைப்படத்தின் டிரைலரில், மிகவும் நேரடியாக என்ன விஷயம் உள்ளதோ அதை சொல்லி கொண்டு வந்திருக்கிறார்கள். அதை தாண்டியும் பல சுவாரஸ்யமான விஷயங்களும் எமோஷங்களும் பார்வையாளர்களுக்கு படத்திற்குள் இருக்கிறது. இயக்குனர் மிகவும் துணிவாக வாரிசு திரைப்படத்தை எடுத்திருக்கிறார். படத்தில் விஜய் கேரக்டரும் அப்படித்தான்” என கூறியுள்ளார்.

Also Read | Varisu : கேரளாவுல விஜய் -யின் ‘வாரிசு’.. இத்தனை ஸ்கிரீன்ல ரிலீஸா? அடிபொலி!!

“விஜய் கிட்ட ஒரு ஆரா இருக்கும்.. SET-ல அதை உணர முடியும்!”.. ‘வாரிசு’ அம்மா ஜெயசுதா EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

varisu vijay mother character jayasudha exclusive

People looking for online information on Jayasudha, Varisu, Vijay will find this news story useful.