Maha
www.garudabazaar.com

பிரபல OTT-யில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்.. வெளியான சூப்பர் தகவல்! வைரல் PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் பிரபல OTT-யில் வெளியாக உள்ளது.

Nayanthara Vignesh Shivan Wedding Reception in Netflix OTT

Also Read | ரிலீசுக்கு முன்பே ஆமிர்கான் நடித்த படத்தை பார்த்த உதயநிதி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்விற்கு இயக்குனர் மணிரத்னம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி, கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Nayanthara Vignesh Shivan Wedding Reception in Netflix OTT

திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று ஜோடியாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகின.

Nayanthara Vignesh Shivan Wedding Reception in Netflix OTT

தேனிலவில் இருந்து தொடர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து பகிர்ந்தார்.

இந்த  வீடியோக்கள் & புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகின. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றன.

Nayanthara Vignesh Shivan Wedding Reception in Netflix OTT

தேனிலவு முடிந்து இந்தியா திரும்பியதும் நயன்தாரா, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன் இணைந்தார்.  இது தொடர்பான புகைப்படங்கள் & வீடியோக்கள் வெளியாகின.

Nayanthara Vignesh Shivan Wedding Reception in Netflix OTT

இந்நிலையில் பிரபல OTT நிறுவனமான நெட்பிளிக்ஸ் நயன்தாரா & விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்து "நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரின் இந்த புகைப்படங்கள் நம்மை நட்சத்திரங்களை பார்க்க வைக்கிறது. நாம் கொஞ்சம் சந்தோஷமா நடனம் ஆடுவோம். ஏனெனில் நயன்தாரா விக்னேஷ் சிவன் நெட்பிளிக்ஸ்க்கு வருகிறார்கள்" என கூறி மணமக்கள் எமோஜியை பதிவிட்டுள்ளனர்.

Also Read | "சிங்கத்துக்கும் புலிக்கும் பொறந்தவன்டா".. LIGER படத்தின் மிரட்டலான டிரெய்லர்

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Vignesh Shivan Wedding Reception in Netflix OTT

People looking for online information on Nayanthara, Nayanthara Vignesh Shivan Wedding Photos, Vignesh shivan will find this news story useful.