Maha
www.garudabazaar.com

"தனுஷ்க்கு செட் ஆகுற சூப்பர் ஹீரோ??.." Russo Brothers சொன்ன அசத்தலான பதில்.. Behindwoods 'Exclusive'!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட பல வெற்றிப்  படங்களை இயக்கியவர்கள் ருஸ்ஸோ பிரதர்ஸ். இவர்கள் இயக்கியுள்ள "தி கிரே மேன்" என்னும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Russo brothers about super hero that fit for dhanush

Also Read | கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் புதிய படம்..ரிலீஸ் எப்போ? வேற லெவல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தமிழில் அடுத்தடுத்து வித்தியாசமான நடிப்பு மற்றும் படைப்புகள் மூலம் மக்களைக் கவர்ந்த நடிகர் தனுஷ், அடுத்தடுத்து பாலிவுட், கோலிவுட் வரை சென்றுள்ளார்.

கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங், அனா டி அர்மாஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் இணைந்து அவர் நடித்துள்ள திரைப்படம் தான் 'தி கிரே மேன்'.

இந்த படத்தின் டீசர் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. சமீபத்தில் படத்தின் பிரீமியர் மற்றும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில், படக்குழுவினருடன் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். தொடர்ந்து இன்று (22.07.2022) தி கிரே மேன் திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் வெளியாக உள்ளது.

Russo brothers about super hero that fit for dhanush

இந்நிலையில், 'BehindwoodsTV' சேனலுக்கு இயக்குனர்கள் Joseph Russo, Anthony Russo மற்றும் தனுஷ் ஆகியோர் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருந்தனர். இந்த வீடியோவின் ஆரம்பத்தில் தமிழில் பேசுவதற்கு முன்பாகவே, Joseph Russo மற்றும் Anthony Russo ஆகியோரிடம் அனுமதி வாங்கி, உங்களுக்கு புரியாது என்று கூறிய படி தனுஷ் தொடங்கியதே வீடியோவின் சிறப்பம்சமாக இருந்தது.

தொடர்ந்து, The Gray Man படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து பேசிய தனுஷ், "எல்லாம் ஆண்டவன் கொடுத்தது தான். இந்தியாவில் இருந்து நான் அங்கே சென்று பணிபுரியும் போது, அவர்களுக்கு இன்னும் திறமை வாய்ந்த இந்தியர்களை பற்றி அறிந்து கொண்டு, அவர்களுடன் பணிபுரிய வேண்டும் என தோன்றும். இதனால், அந்த கடமை எனக்கு அதிகமாக இருந்தது. மேலும், ஸ்டண்ட் செய்வது ஏற்கனவே பழகி இருந்தாலும், இங்கே கற்றுக் கொள்ளவும் நிறைய இருந்தது. அதற்கான பயிற்சிகளும் சுவாரஸ்யமாக இருந்தது" என குறிப்பிட்டார்.

Russo brothers about super hero that fit for dhanush

தொடர்ந்து, தனுஷை படத்தில் தேர்வு செய்தது பற்றி பேசிய Anthony Russo, "அவரிடம் ஒரு ஸ்பெஷல் Quality உள்ளது. வியக்கத்தக்க ஒரு Screen Presence தனுஷிடம் உள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் அவர் அற்புதமாக செயல்படக் கூடியவர். அது எங்களுக்கு மிகவும் பிடித்து, அவரையும் வியந்து பார்த்து பின்னர் தேர்வு செய்தோம். படத்திலும் அவை அனைத்தையும் அவர் அற்புதமாக கொண்டு வந்துள்ளார்" என தெரிவித்தார்.

தொடர்ந்து, சில Rapid கேள்விகளுக்கு Russo Brothers பதிலளித்த போது, "தனுஷிற்கு பொருந்த கூடிய சூப்பர் ஹீரோ எது?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த இருவரும், "தனுஷே ஒரு சூப்பர் ஹீரோ தான்" என குறிப்பிட்டனர். அதே போல, இந்தியன் சினிமா குறித்தும் அவர்கள் பேசி இருந்தனர்.

Russo brothers about super hero that fit for dhanush

தொடர்ந்து, Russo Brothers தனியாக திரைப்படங்கள் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த Joseph Russo, "25 ஆண்டுகளாக இணைந்து பணிபுரிந்து வருகிறோம். ஒன்றாக சேர்ந்து பணிபுரிவது தான் எங்கள் செயல்முறையின் ரகசியம். இதனால், தனித்தனியாக பணிபுரியும் திட்டம் இல்லை" என தெரிவித்தார்.

கடைசியில், தமிழ் முறைப்படி, தனுஷுடன் இணைந்து Russo Brothers இருவரும் துண்டையும் ஸ்டைலாக தோளில் போட்டுக் கொண்டனர்.

இது தொடர்பான முழு வீடியோவைக் காண:

"தனுஷ்க்கு செட் ஆகுற சூப்பர் ஹீரோ??.." RUSSO BROTHERS சொன்ன அசத்தலான பதில்.. BEHINDWOODS 'EXCLUSIVE'!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Russo brothers about super hero that fit for dhanush

People looking for online information on Dhanush, Russo Brothers, The Gray Man will find this news story useful.