வீடியோ: சகோதரி பற்றி பேசும் போது கதறி அழுத ஆலியா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், தனது சகோதரி குறித்து பேசுகையில் மேடையிலேயே கண் கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Alia Bhatt Breaks Into Tears While Talking About Sister Shaheen Bhatt’s Book

மும்பையில் நடைபெற்ற பெண்கள் சம்மந்தமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய நடிகை ஆலியா பட், தனது சகோதரி எழுதிய புத்தகம் குறித்து பேசுகையில் கண்ணீர் விட்டு அழுத உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட்-சோனி ரஸ்தான் தம்பதியினரின் மகளான நடிகை ஆலியாவுக்கு, ஷஹீன் பட் என்ற சகோதரி இருக்கிறார். எழுத்தாளரான ஷஹீன் எழுதிய ‘I’ve Never Been (Un)Happier2’ என்ற புத்தகம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய நடிகை ஆலியா பட்,  தனது சகோதரி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டது பற்றி பேசினார். திடீரென உணர்ச்சிவசப்பட்டு நடிகை ஆலியா பட் கதறி அழுதார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

This a difficult conversation and we are really grateful to @aliaabhatt and @shaheenb

A post shared by Barkha Dutt (@barkha.dutt) on