போட்டி போட்டு நடிப்பீங்களாமே? பாலிவுட் நடிகையுடன் இணைய பாகுபலி இயக்குநர் ஆர்வம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பாகுபலி’ திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பின் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவிருக்கும் RRR திரைப்படத்தில் நடிப்பது குறித்து ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்த நடிகை ஆலியா பட்டிற்கு இயக்குநர் ராஜமவுலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

SS Rajamouli shares he heard about Alia bhatt's talent to compete with the costars

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை டைசி எட்கர் ஜோன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராமராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படமாக, 1920-களில் காலக்கட்டத்தில் நடக்கும் கற்பனை கதையாக இப்படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஆலியா பட் தனது ட்விட்டர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

அவரது ட்வீட்டில், இன்று மிகவும் பெருமையாக உள்ளது. இத்தகைய பெரிய பிரபலங்கள் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளது. உங்கள்(ராஜமவுலி) இயக்கத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி’ என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் ராஜமவுலி பதில் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், ‘கேள்விப்பட்டேன், சக நடிகர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக நடிப்பீர்கள் என்று. என் படத்திலும் அதை காண ஆர்வமாக இருக்கிறேன்’ என ராஜமவுலி ட்வீட் செய்துள்ளார்.

RRR என தலைப்பிடப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளில் பேன் இந்தியா படமாக உருவாகிறது. இப்படம் வரும் 2020ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.