பாகுபலி இயக்குநரின் அடுத்த பிரம்மாண்டத்தில் இணைந்த பாலிவுட் நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பாகுபலி’ திரைப்படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள RRR திரைப்படத்தின் நாயகியாக பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட் ஒப்பந்தமாகியுள்ளார்.

Alia Bhatt on board for Rajamouli's Next with Ram charan and Jr.NTR film titled as RRR

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற  RRR பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகை ஆலியா பட் முதன் முறையாக அறிமுகமாகிறார்.

ஆலியா பட்டை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, ஹாலிவுட் நடிகை டைசி எட்கர் ஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட்-ம், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை டைசியும் நடிக்கவுள்ளனர்.

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராமராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, 1920-களில் நடக்கும் கற்பனை கதையாக உருவாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு RRR என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொழிகளில் இதன் விரிவாக்கம் மாறுபடும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளில் பேன் இந்தியா படமாக உருவாகும் இப்படம் வரும் 2020ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.