ஒரே நேரத்தில் இந்தியாவின் இரண்டு பிரம்மாண்ட இயக்குநர்களின் படங்களில் ஆலியா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர்களான ஷங்கர், எஸ்.எஸ்.ராஜமவுலி போல் பாலிவுட்டில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் நடித்த ‘பத்மாவத்’.

Inshallah: Alia Bhatt joins Salman Khan in Sanjay Bhanshali's Epic Love story

இந்நிலையில், பன்சாலி இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திடைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘இன்ஷால்லா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் நாயகனாக சல்மான் கான் நடிக்கவிருக்கிறார். சல்மான் கானுக்கு ஜோடியாக ஆலியா பட் ஒப்பந்தமாகியுள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான ‘ஹம் தில் தே சுக்கே சனம்’ திரைப்படத்தில் சல்மான் கான் - ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்திருந்தனர். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பின் பன்சாலி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக நடிகர் சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது ட்வீட்டில், ‘20 ஆண்டுகள் ஆகிவிட்டன.ஒருவழியாக சஞ்சயும் தானும் இணைந்துவிட்டோம். ஆலியாவுடன் இணைந்து நடிப்பதை எதிர்நோக்கியிருக்கிறேன். இன்ஷால்லா-இந்த பயணத்தில் அனைவரும் ஆசிர்வதிக்கப்படுவோம்’ என ட்வீட் செய்துள்ளார்.

இதேபோல், நடிகை ஆலியா பட் தனது ட்விட்டரில், எனக்கு 9வயதாக இருக்கும்போது பன்சாலி அலுவலகத்திற்கு பதட்டத்தோடு சென்றேன். அவரது அடுத்தப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு சென்றேன். நீண்ட நாள் காத்திருப்பு இது. கண்களை திறந்துக் கொண்டே கனவு காண சொல்வார்கள். நானும் கண்டேன், சஞ்சய்-சல்மான் கூட்டணி ஒரு மாயாஜலம் செய்யும்.

இன்ஷால்லா என்ற பயணத்தில் இவர்களுடன் இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன் என ஆலியா பட் தெரிவித்துள்ளார். ஆலியா பட் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும், ‘பிரம்மாஸ்த்ரா’ படத்திலும் ஆலியா நடித்து வருகிறார்.