'அர்ஜூன் ரெட்டி' ஸ்டைலில் அலப்பறை செய்யும் யோகி பாபு : 'ஜடா' புரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 02, 2019 01:59 PM
ஃபுட் பால் விளையாட்டு வீரராக கதிர் நடித்துள்ள படம் 'ஜடா'. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தி போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரிக்க, குமரன்.ஏ இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்க, யோகி பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அர்ஜூன் ரெட்டி பிஜிஎம் பின்னணியில் ஒலிக்க, அர்ஜூன் ரெட்டி என யோகி பாபு அலப்பறைகள் செய்கிறார்.
☺️#4DaysForJada#JadafromDec6th@am_kathir @im_gowthamoffl @ARichardkevin @SamCSmusic @ArSoorya @ask_poetstudios @ynotxworld @shanastudios @thinkmusicindia pic.twitter.com/o39ST6Q9zo
— Yogi Babu (@iYogiBabu) December 2, 2019