டி.இமான் வெளியிட்ட அசோக் செல்வனின் ‘வேழம்’ திரைப்படத்தின் ரொமாண்டிக் பாடல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் K4 Kreations சார்பில் கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகியுள்ள “வேழம்” திரைப்படத்தின் பாடல் இன்று  வெளியாகியுள்ளது.

D.Imman Ashok Selvan starrer Vezham movie song

இசையமைப்பாளர் இமான் “மாறும் உறவே” எனும் பாடலின் வீடியோவை இன்று தமது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.

வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்கும் நடிகர் அசோக் செல்வன், தனது சிறப்பான நடிப்பினால்,  பாக்ஸ் ஆபிஸில் ஒரு முக்கியமான  நட்சத்திரமாக மாறியுள்ளார். வரவிருக்கும் அவரது திரைப்படமான ‘வேழம்’  மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

D.Imman Ashok Selvan starrer Vezham movie song

குறிப்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரெய்லர்  மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை சந்தீப் ஷியாம் இயக்குகிறார். இத்திரைப்படம் ஜூன் 24, 2022 அன்று உலகம் முழுவதும் திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ஒரு எஃப்எம் நிலையத்தில் நடைபெற்றது.

D.Imman Ashok Selvan starrer Vezham movie song

சக்தி அரவிந்த் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, A.K. பிரசாத் எடிட்டிங்கை கவனித்துக் கொள்கிறார்.  படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து ராஜ  கிருஷ்ணமூர்த்தி(கிட்டி), சங்கிலி முருகன், மற்றும் மராத்தி நடிகர் மோகன் அகாஸ்தே, உடன் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். SP Cinemas  இப்படத்தினை உலகமெங்கிலும் தியேட்டரில் வெளியிடுகின்றனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

D.Imman Ashok Selvan starrer Vezham movie song

People looking for online information on Ashok Selvan, வேழம், Vezham will find this news story useful.