சமந்தா - ரன்வீர் சிங் திடீர் சந்திப்பு.. இதான் காரணமா? வைரல் போட்டோவுடன் பின்னணி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா - ரன்வீர் சிங் சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

Samantha Ranveer Singh Meeting Photos gone viral

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து விளம்பரபடத்தில் நடிக்கும் தகவலை பகிர்ந்து, நடிகை சமந்தா ரூத் பிரபு தனது உற்சாகத்தை இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தியுள்ளார்.

இருவரும் சமீபத்தில் ஒரு TVC படப்பிடிப்பிற்காக முதல் முறையாக இணைந்துள்ளனர், மேலும் இருவரும் தங்களது சமூக ஊடகங்களில் இது குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டனர்.

Samantha Ranveer Singh Meeting Photos gone viral

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரன்வீருடன் எடுத்த ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், "எப்போதும் இனிமையானது" என்று எழுதியுள்ளார். ரன்வீரும் சமந்தாவுடன் எடுத்த புகைப்படத்தை மறுபகிர்வு செய்து, மேலும் பல இதய ஈமோஜிகளுடன் "'இது ஒரு மகிழ்ச்சியான தருணம் சமந்தா" என்று எழுதியுள்ளார்.

Samantha Ranveer Singh Meeting Photos gone viral

விமானப்படை அதிகாரி சீருடையில் ரன்வீருடன் போஸ் கொடுத்த சமந்தாவின் புகைப்படம் தற்போது இனையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சமந்தா, தற்போது தமிழில் இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார்.

Samantha Ranveer Singh Meeting Photos gone viral

நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சமந்தா. மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Ranveer Singh Meeting Photos gone viral

People looking for online information on Ranveer Singh, Samantha will find this news story useful.