நடிகை சுனைனா தனி ஹீரோயினாக நடிக்கும் ஆக்சன் படம்.. வெளியான மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய திரையுலகின்  திறமை மிக்க பிரபல நடிகை இருப்பவர் சுனைனா. 

Here's the first look poster of Sunainaa starrer Regina.

Also Read | 'விக்ரம்' படத்தின் முதல் மூன்று நாள் USA வசூல்.. முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்த கமல்!

நீர்ப்பறவை,  சில்லுக்கருப்பட்டி படங்களில்  தன் நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்தவர், தற்போது பன்மொழிகளில் உருவாகும் ரெஜினா என்ற புதிய திரைப்படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.  

( Yellow Bear Production LLP ) எல்லோ பியர் புரொடக்‌ஷன் சதீஷ் நாயர் இப்படத்தினை தயாரிக்கிறார். இப்படம் நான்கு மொழிகளில் தயாராகிரது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் "ரெஜினா" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று பிரபல டைரக்டர் வெங்கட் பிரபு வெளியிட்டார். மலையாள போஸ்டரை பிரபல மலையாள டைரக்டர் ஆஷிக் அபு ( AASHIQ ABU ) வெளியிட்டார்.           

Here's the first look poster of Sunainaa starrer Regina.         

இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார், மலையாள பிரபலம் டோமின் டி சில்வா. இவர், மலையாளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட "பைப்பின் சுவத்திலே பிராணயம்" மற்றும் "ஸ்டார்" படங்களை இயக்குகியவர். இப்படம் பெண்களை மையமாகக் கொண்ட ‘ஸ்டைலிஷ் திரில்லராக’ இருக்கும் என்று இயக்குநர்  டோமின் டி சில்வா கூறியுள்ளார். மேலும் நீரோட்டத்திற்கு எதிராக ஒரு மீன் நீச்சலடிப்பதை போல, இப்படம் ஒரு சாதாரண இல்லத்தரசி ஆக இருக்கும் ஒரு பெண், அசாதாரணமான விஷயங்களைச் சாதிப்பதைப் பற்றியதாகவும், அனைவரயும் ஈர்க்கக்கூடிய ஒரு திரில்லர் படமாக இருக்கும், ”என்றார்.

ரெஜினா படத்தின் பாடல்களை இசையமைத்து படத்தை தயாரிக்கிறார் சதிஷ் நாயர். இந்த பாடல் 4 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சில பாடல்கள் சிங்கப்பூரில் பதிவாக்கப் பட்டது.

Here's the first look poster of Sunainaa starrer Regina.

கிராமி விருது வென்ற, டபுள் பேஸ்-இல் இசையமைக்கும் வல்லமை படைத்தவர்களில் ஒருவரான கிறிஸ்டி  வாசித்து இருக்கிறார். இவருடன் ஜோண்ட் என்பவரும் வாசித்திருக்கிறார். இவர் ஜாஸ் பாணியில் வல்லமை வாய்ந்தவர்.

பாடல்களுக்கான வரிகளை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R எழுதியுள்ளனர்.

பவி K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் செய்கிறார். PRO ஜான்சன். படத்தின் படல்கள் வெளீயீடு மற்றும் வெளியீட்டுன் தேதி பின்னர் அறிவிக்கப் படும்.

Also Read | சமந்தா - ரன்வீர் சிங் திடீர் சந்திப்பு.. இதான் காரணமா? வைரல் போட்டோவுடன் பின்னணி தகவல்

Here's the first look poster of Sunainaa starrer Regina.

People looking for online information on Regina Movie, Regina Movie First Look Poster, Sunainaa will find this news story useful.