நானி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து நடித்து ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'ஜெர்ஸி' . இந்த படத்தை கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சனு வர்க்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளியான டிரெய்லர்கள் மற்றும் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்தில் நடித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹரிஷ் கல்யாண், "இது முற்றிலும் நானே எதிர்பாராதது, என் கதாபாத்திரத்தை கவனித்து, இந்த அளவிற்கு என்னை பாராட்டுவார்கள் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. தெலுங்கு ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்திற்கு என்னை நடிக்க கேட்டபோதே அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன், ஆனால் இந்த அளவுக்கு மக்களை சென்று சேரும் என்று நினைக்கவில்லை.
இதில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், புகழ்பெற்ற இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் எனக்கு ஃபோன் செய்து என்னை பாராட்டுவது தான். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஒவ்வொருவருக்கும், குறிப்பாக என் நண்பர் நானிக்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்றார்.