'கவினுக்கு கேர்ள் ஃபிரெண்ட் இருக்கு' 'அங்க தான் கவின் மாட்டிக்கிட்டான்'
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 31, 2019 11:18 AM
சரவணன் மீனாட்சி சின்னத்திரை தொடரில் வேட்டையன் என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் கவின். இவர் நட்புனா என்னனு தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் அவருடன் ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் சார்பாக ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்திருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸில் கவினின் செயல்பாடு குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பொதுவாகவே கவின் நன்றாக தெரிந்தவர்களிடம் மட்டும் தான் பேசுவார். எந்த பெண்களிடமும் நான் பேசி பார்த்ததில்லை.
ஆனால் பிக்பாஸில் அனைவரின் கவன ஈர்ப்பிற்காக பெண்களுடன் பேசுவது போல நடிக்கிறார். ஆனால் அவருக்கு சாண்டி மாஸ்டர் முன்பு இருந்தே தெரியும். பிக்பாஸ் வீட்டிலும் அவருடன் மட்டும் தான் நன்றாக பழகுகிறார். அங்க தான் கவின் மாட்டிக்கிட்டான்.
கவினுக்கு கேர்ள் ஃபிரெண்டு இருக்கு. அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். அதுல டவுட்டே இல்ல. ஆனால் அது யார் என்று எனக்கு தெரியவில்லை.என்று தெரிவித்திருந்தார்.
'கவினுக்கு கேர்ள் ஃபிரெண்ட் இருக்கு' 'அங்க தான் கவின் மாட்டிக்கிட்டான்' வீடியோ