www.garudabazaar.com

அஜித்குமார் நடிக்கும் 'துணிவு'.. செம போட்டோவுடன் வெளிவந்த சரவெடி அப்டேட்! FANS HAPPY

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித்குமாரின் 'துணிவு' படத்தின் புதிய அப்டேட் புகைப்படம் மூலம் வெளியாகி உள்ளது.

Ajith Kumar AK Thunivu Movie Latest Dubbing Update

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு  'துணிவு' என பெயரிடப்பட்டது. இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

Ajith Kumar AK Thunivu Movie Latest Dubbing Update

இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Ajith Kumar AK Thunivu Movie Latest Dubbing Update

இந்நிலையில் துணிவு படத்தின் டப்பிங் பணிகள் தற்போது துவங்கி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. டப்பிங் பணிகள் துவங்கும் முன் நடைபெற்ற பூஜை புகைப்படம் வெளியாகி உள்ளன. இந்த பூஜையில் இயக்குனர் எச். வினோத், நடிகர் ஜி.எம். சுந்தர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK Thunivu Movie Latest Dubbing Update

People looking for online information on Ajith, Ajith Kumar, AK, H Vinoth, Thunivu will find this news story useful.