www.garudabazaar.com

bigg boss 6 tamil : "அவர் என்ன ஆட்டம் ஆடுறார்னே தெரியல".. சூடு பிடிக்கும் இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

3rd week nomination process started bigg boss 6 tamil

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் குயின்சி ரச்சிதாவையும், அசீம் மற்றும் அசல் ஆயிஷாவையும், விக்ரமன் மற்றும் ஆயிஷா அசீமையும், அசல் மற்றும் நந்தினி மகேஸ்வரியையும், தனலட்சுமி உள்ளிட்டோர் அசலையும் நாமினேட் செய்கின்றனர். இதில் ஆயிஷா, யாரையோ குறிப்பிட்டு அவர் என்ன ஆட்டம் ஆடுறார்னே தெரியல என்று சொல்கிறார். அவர் அசல் கோலாரை சொல்வது போல் தெரிந்தாலும் முழு உண்மை எபிசோடில்தான் தெரியும்.

ராப் பாடகர் அசல் கோலாருக்கு, பிக்பாஸ் வீட்டில் முன்னதாக தனலட்சுமியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அசல் தன்னை பாடி ஷேமிங் பண்ணுவதாக தனலட்சுமி குறிப்பிட்டிருந்தார். இதனிடையே அசல் கோலார், ஜனனிக்கு good touch, bad touch சொல்லிக் கொடுக்கு காட்சிகள் பிக்பாஸ் வீட்டில் வைரலாகி இருந்தன. பிக்பாஸ் வீட்டை பொறுத்தவரை ஜிபி முத்து குடும்ப நினைப்பாக இருப்பதால் கமல் மற்றும் பிக்பாஸிடம் சொல்லிவிட்டு விடைபெற்றார். இதேபோல்,  ‘மெட்டி ஒலி’ சாந்தி முதல் அதிகாரப்பூர்வ எலிமினேஷல் ப்ராசஸில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

தொடர்புடைய இணைப்புகள்

3rd week nomination process started bigg boss 6 tamil

People looking for online information on Ayesha, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Janani, Vijay Television, Vijay tv will find this news story useful.