www.garudabazaar.com

"இப்படி ஒரு விசயம் கண் முன்னால நடந்துட்டே இருக்கு" .. உதயநிதியின் கலகத்தலைவன் டீசர்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கலகத் தலைவன் படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கிறது.

Udhayanidhi Stalin Kalakathalaivan Movie Teaser released

உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்திலான புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'கலகத்தலைவன்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மெட்ராஸ் பட புகழ் கலையரசனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர, நடிகர் ஆரவ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போட்டியில் டைட்டில் கார்டு வென்றவர் நடிகர் ஆரவ் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலினே இந்தப் படத்தை தயாரிக்கிறார். உதயநிதியின் இந்த படத்திற்கு அரோல் கொரேலி & ஸ்ரீகாந்த் தேவா இணைந்து இசையமைக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட்டிருக்கிறார்.

குற்றங்களை நிகழ்த்தும் நெட்வொர்க் குறித்து பின்னணியில் குரல் எழ, சஸ்பென்சாகவே இந்த டீசர் வீடியோ நகர்கிறது. 1.16 நிமிடங்கள் ஓடும் இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த மக்களிடையே வைரலாக பரவி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதுடன் சினிமாவில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், டான் , காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் முன்னணி திரைப்படங்களை தம்முடைய ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi Stalin Kalakathalaivan Movie Teaser released

People looking for online information on Kalakathalaivan, Teaser, Udhayanidhi Stalin will find this news story useful.