www.garudabazaar.com

மகள் பிறந்தநாளை முன்னிட்டு Prince சிவகார்த்திகேயன் பகிர்ந்த Cute புகைப்படம்.. அந்த Caption தான் செம்ம..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகளுடைய பிறந்த நாளை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதனுடன் அவர் பகிர்ந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Actor shivakarthikeyan Post about his Daughter Birthday

கடந்த 2012 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரினா திரைப்படத்தின் மூலம், கதாநாயகனாக அறிமுகம் ஆனார் சிவகார்த்திகேயன். அதனை தொடர்ந்து மனம் கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் ஆகிய படங்களின் மூலம் ஏராளமான மக்களிடையே அவர் கதாநாயகனாக பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பெரும் வரவேற்பை அளித்தன.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ப்ரின்ஸ் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராதனாவின் பிறந்தநாளை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில்,"ஹேப்பி பர்த்டே மை ப்ரின்சஸ்" என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகளுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

சிவகார்த்தியேனின் மகள் ஆராதனா, அருண் ராஜா காமராஜ்-ன் 'கனா' படத்தில் "வாயாடி பெத்த புள்ள" பாடலை தந்தையுடன் இணைந்து பாடியிருந்தார். இதனை தொடர்ந்து மகாபலிபுரத்தில் நடைபெற்ற 44 செஸ் ஒலிம்பியாட் தொடரின் நிறைவு விழாவில் தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை குழுவினருடன் இணைந்து பாடி பலரது கவனத்தையும் ஈர்ந்திருந்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் இந்த பதிவில் பலரும் ஆராதனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor shivakarthikeyan Post about his Daughter Birthday

People looking for online information on Aaradhana, Daughter, Prince, Sivakarthikeyan will find this news story useful.