www.garudabazaar.com

பா. ரஞ்சித் - விக்ரம் இணையும் "தங்கலான்".. மிரட்டலான 1st லுக்! டிசைன் பண்ணது இவரா? செம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' பட முதல் லுக் போஸ்டர் டிசைனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Pa Ranjith Vikram Thangalaan First Look Designer Sivam C Kabilan

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடித்திருந்த கோப்ரா திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது.  இதனைத் தொடர்ந்து,  பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இதில், ஆதித்த கரிகாலன் என்னும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார்.

மெட்ராஸ், கபாலி, காலா சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட  திரைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் பா. ரஞ்சித். இவரது இயக்கத்தில் கடைசியாக "நட்சத்திரம் நகர்கிறது" என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, விக்ரமை வைத்து 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்க உள்ளார்.

Pa Ranjith Vikram Thangalaan First Look Designer Sivam C Kabilan

இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர்.

Pa Ranjith Vikram Thangalaan First Look Designer Sivam C Kabilan

எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர்.  இந்நிலையில், இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் & படத்தின் டைட்டடில் லுக் டீஸர் நேற்று வெளியானது. வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் வீடியோ & போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. புகை சூழ்ந்த நிலையில் கையில் அரிவாளுடன் விக்ரம் நிற்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Pa Ranjith Vikram Thangalaan First Look Designer Sivam C Kabilan

இந்த முதல் லுக் போஸ்டரை டிசைனர் சிவம் சி கபிலன் வடிவமைத்துள்ளார். இவர் ஏற்கனவே கோப்ரா, திருச்சிற்றம்பலம், நட்சத்திரம் நகர்கிறது, காட்பாதர், ஆர் ஆர் ஆர், விருமன், வாத்தி, வணங்கான், லைகர், ப்ரின்ஸ், வெந்து தணிந்தது காடு, ராதே ஷ்யாம், சாணிக் காயிதம், ஜெயிலர் படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்தவர் ஆவார்.

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith Vikram Thangalaan First Look Designer Sivam C Kabilan

People looking for online information on Chiyaan61, Pa Ranjith, Sivam C Kabilan, Thangalaan, Vikram will find this news story useful.