விக்ரம் வேதா ஜோடியின் அடுத்தப்படம் ரீமேக்கா? - விவரம் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Vikram Vedha stars Madhavan and Shraddha Srinath will be pairing up again for untitled project

கடந்த 2017ம் ஆண்டு சஸ்பன்ஸ் த்ரில்லர் படமான ‘விக்ரம் வேதா’ வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. புஷ்கர் காயத்ரி இயக்கிய இப்படத்தின் மூலம் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர்.

தற்போது இந்த ஜோடி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ‘மாறா’ என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும், இப்படம் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘சார்லி’ படத்தின் ரீமேக்காக உருவாகவிருப்பதாகவும் தகவல்கள் பரவின.

ஆனால் இந்த தகவல் ஏதும் உறுதியானவை அல்ல என நமக்கு தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தின் கதை இன்னும் விவாதத்தில் இருப்பதாகவும், இப்படத்தின் டைட்டிலும் இன்னும் உறுதியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் செப்ரம்பர் மாதத்திற்கு முன்பே தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மாதவன் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தில் நடித்து, இயக்கி வருகிறார். முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியுள்ளது. அதேபோல், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், தல அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட்.8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.