www.garudabazaar.com

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம்.. படத்தோட ஷூட்டிங் எப்போ? BREAKING அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Aishwarya Rajinikanth Lal salaam shooting starts from March 7th sources

Images are subject to © copyright to their respective owners.

Also Read | PS2 கிளிம்ப்ஸ்.. வைரலாகும் மற்றொரு ஐஸ்வர்யா ராயின் கேரக்டர் லுக்..! வீடியோ

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் '3', கௌதம் கார்த்திக் நடிப்பில் 'வை ராஜா வை' உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை  இயக்க உள்ளார்.

Aishwarya Rajinikanth Lal salaam shooting starts from March 7th sources

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Aishwarya Rajinikanth Lal salaam shooting starts from March 7th sources

Images are subject to © copyright to their respective owners.

சிலநாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | VIDEO: தங்கலான் ஷூட்டிங்கில் கிரிக்கெட்.. பிளிண்டாப் ஸ்டைலில் பவுலிங் போட்ட பா. ரஞ்சித்..!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth Lal salaam shooting starts from March 7th sources

People looking for online information on Aishwarya Rajinikanth, Lal Salaam, Lal salaam shooting Update, Rajinikanth will find this news story useful.