Kaateri logo top
www.garudabazaar.com

கர்ப்பகாலத்தில் ஏற்படும் கால் வீக்கம்.. நடிகை சோனம் கபூர் பகிர்ந்த வைரல் இன்ஸ்டாகிராம் PHOTO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் போனிகபூரின் தம்பியும் பிரபல நடிகரான அனில் கபூரின்  மகள் நடிகை சோனம் கபூர்.

Sonam Kapoor Latest Instagram Story Goes Viral

Also Read | மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் கார்த்தி.. வைரல் வீடியோ!

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். சோனம் கபூர். கடந்த 2018-ல்  நீண்டகாலமாக நண்பரான தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்துக் கொண்டனர். மும்பையில் நடைபெற்ற திருமண விழாவில் நண்பர்கள், உறவினர்கள் ஏராளமான திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

சோனம் கபூர் திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும், கணவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும், பேஷன் புகைப்படங்களையும் பதிவேற்றுவார். சில நாட்களுக்கு முன் கர்ப்பம் குறித்த செய்தியை வெளியிட்ட சோனம் கபூர், சோனம் மற்றும் ஆனந்த் அஹுஜா தங்களின் முதல் குழந்தை உருவான செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.

Sonam Kapoor Latest Instagram Story Goes Viral

சமீபத்தில் கூட முதல்முறையாக நடிகை சோனம் கபூர் மற்றும் அவரது கணவர் ஆனந்த் அஹுஜா ஆகியோர் தங்களது ‘பேபிமூனுக்காக’ இத்தாலியின் புளோரன்ஸ் நகருக்கு சென்றனர்.  கர்ப்பமான பின் தனது செல்ஃபி போட்டோவை இணையத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

Sonam Kapoor Latest Instagram Story Goes Viral

சோனம் கபூர்  வியாழக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார், மேலும் கர்ப்பம் எப்போதும் அழகாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். சோனம் கபூரின் கால் வீங்கியிருப்பதையும், படுக்கையில் ஒரு கால் தலையணையில் ஒரு காலை வைத்து ஓய்வெடுப்பதையும் படம் காட்டுகிறது. அந்த புகியப்படத்திற்கு , "கர்ப்பம் சில நேரங்களில் அழகாக இருக்காது" என்று தலைப்பிட்டுள்ளார்.

Sonam Kapoor Latest Instagram Story Goes Viral

Also Read | சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு'.. ஹீரோயின் சித்தி இத்னானி கொடுத்த புது அப்டேட்!

Sonam Kapoor Latest Instagram Story Goes Viral

People looking for online information on Sonam Kapoor, Sonam Kapoor Latest Instagram Story will find this news story useful.