Kaateri logo top
www.garudabazaar.com

ஜெயம் ரவி - பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படம்.. புகைப்படங்களுடன் வெளியான சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.

Jayam Ravi Priyanka Mohan JR30 Movie Poojai Stills

Also Read | AK61 கெட்-அப்பில் கையில் துப்பாக்கியுடன் நடிகர் அஜித்குமார்.. கூட இருக்குறது யாரு? வைரல் PHOTO

அடங்க மறு, கோமாளி, பூமி உள்ளிட்ட படங்களில் சமீபத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி, அடுத்ததாக பொன்னியின் செல்வன், அகிலன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதில், மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படத்தில், ஜெயம் ரவியுடன் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.

Jayam Ravi Priyanka Mohan JR30 Movie Poojai Stills

ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படமான அகிலன் படம் தயாராகி வருகிறது. ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர்.

Jayam Ravi Priyanka Mohan JR30 Movie Poojai Stills

துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படம் ஆகஸ்ட் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jayam Ravi Priyanka Mohan JR30 Movie Poojai Stills

இந்நிலையில் ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் பிரியங்கா மோகனுடன் ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்க உள்ளார். ஜெயம் ரவியின் 30வது திரைப்படமாக இந்த படம் உருவாக உள்ளது.

Jayam Ravi Priyanka Mohan JR30 Movie Poojai Stills

இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த பூஜையில் நடிகர் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் கலந்து கொண்டனர்.

Also Read | AK 61-ல் இணைந்த தேசிய விருது வென்ற ஸ்டண்ட் இயக்குனர்.. போட்டோவுடன் வெளிவந்த சூப்பர் தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi Priyanka Mohan JR30 Movie Poojai Stills

People looking for online information on Jayam Ravi, JR30 Movie, JR30 Movie Poojai Stills, Priyanka Mohan will find this news story useful.