Kaateri logo top
www.garudabazaar.com

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் கார்த்தி.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Karthi Visiting Madurai Meenakshi Amman Temple

Also Read | AK61 கெட்-அப்பில் கையில் துப்பாக்கியுடன் நடிகர் அஜித்குமார்.. கூட இருக்குறது யாரு? வைரல் PHOTO

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’.

இந்தப் படத்தை நடிகர் சூர்யா & ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று முன்தினம்  நடந்தது. இந்த விழாவில் படத்தின் டிரெய்லரும் பாடல்களும் வெளியிடப்பட்டது.

Karthi Visiting Madurai Meenakshi Amman Temple

இந்த விருமன் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் பாரதிராஜா,  இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்  உட்பட படக்குழுவினர் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற பிறகு நடிகர் கார்த்தி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். சித்திரை வீதியில் நடிகர் கார்த்தி நடந்து வரும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

Karthi Visiting Madurai Meenakshi Amman Temple

கோயில் நுழைவாயில் அருகே உள்ள காலணிகள் பாதுகாப்பகத்தில் உள்ளே நுழையும் காட்சிகள் வரை வீடியோவில் உள்ளன.

முன்னதாக விருமன் படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் 60 நாட்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Karthi Visiting Madurai Meenakshi Amman Temple

Also Read | ஜெயம் ரவி - பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படம்.. புகைப்படங்களுடன் வெளியான சூப்பர் அப்டேட்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் கார்த்தி.. வைரல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Visiting Madurai Meenakshi Amman Temple

People looking for online information on Karthi, Karthi Visiting Meenakshi Amman Temple, Madurai, Madurai Meenakshi Amman Temple, Viruman will find this news story useful.